Connect with us

#24 Exclusive

‘நீட்’ அனிதா குடும்பத்திற்கு உதயநிதி அளித்த அழியாத பரிசு!

கடந்த 2017ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அனிதாவின் தற்கொலைக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பெரும் போராட்டங்களும் நடத்தின

Loading...

அனிதாவின் இந்த தற்கொலையால் நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் முடிவு செய்திருந்தாலும் மத்திய அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை என்பதால் தற்போது தொடர்ந்து நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Loading...

இந்த நிலையில் நேற்று அனிதாவின் இல்லத்திற்கு சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தினருடன் சில நேரம் ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தார்

மேலும் அனிதாவின் வீட்டு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் அனிதா நூலகம் என்ற நூலகத்திற்கு அவர் சில புத்தகங்களையும் பரிசாக வழங்கியுள்ளார். இந்தப் புத்தகங்கள் காலத்தால் அழியாமல் இருக்கும் என்றும் பல புதிய அனிதாக்களை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தலையைத் தட்டும் தாழ்வான ஓட்டு வீடு. இன்றும் அப்படியே உள்ளது அனிதாவின் வீடு. அதன் அருகிலேயே நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள அவரின் பெயரிலான நூலகம். அனிதாவின் லட்சியம்தான் நிறைவேறவில்லை. பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும் .நானும் துணை நிற்பேன்

பாஜக-அதிமுக அரசுகள் புகுத்திய நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட தங்கை அனிதாவின் நினைவாக அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்துக்கு தலைவர் முக ஸ்டாலின்
அவர்கள் தேர்ந்தெடுத்துத்தந்த நூல்களை வழங்கினேன். இவை, என்னை சந்திக்கவரும் இளைஞரணியினர் வழங்கிய புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending