உத்தவ் தாக்கரே முதல்வராக நீடிப்பார் என செய்திகள் வெளியான நிலையில் நீதிமன்றம் மூலம் மற்றொரு ஆப்பு !

உத்தவ் தாக்கரே முதல்வராக நீடிப்பார் என செய்திகள் வெளியான நிலையில் நீதிமன்றம் மூலம் மற்றொரு ஆப்பு !

Loading...

மகாராஷ்டிரா மாநில முதல்வராக உள்ள உத்தவ் தாக்கரே மே 28 ம் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்ட மேலவை உறுப்பினராகவோ தேர்வாகவில்லை என்றால் அவரது முதலமைச்சர் பதவி காலியாகும் இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மாநில ஆளுநர் உத்தவ் தாக்கரேவை மேலவை உறுப்பினராக ஆளுநர் கோட்டாவில் நியாமனம் செய்ய கோரிக்கைவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் சாமர்த்தியமாக காய் நகர்த்தியுள்ளார் இது குறித்து விஜயகுமார் அவர்கள் எழுதிய கட்டுரை பின்வருமாறு :- கவர்னர் உத்தவை காப்பாற்றினாரா?

Loading...

அமைச்சரவை பரிந்துரைத்தும் கவர்னர் தன்னை எம்எல்சியாக நியமிக்க மறுக்கிறார் நீங்கள் கருணை காட்டுங்கள் என்று உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியிடம் கெஞ்ச கடைசியில் மோடி உத்தவ் தாக்க ரேயிடம் சட்டப்படி உள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்து உதவுவோம் என்று வாக்கு
கொடுத்தார்.

இதனால் உத்தவ் தாக்கரேவை எம்எல்சியாக கவர்னர் நியமிக்க க்கூடும் என்றுஎதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில் கவர்னர் நேற்று மகாராஸ்டிரா சட்ட மேலவையில் காலியாக உள்ள 9 இடங்களுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும் என்று தேர்தல் கமிசனுக்கு கடிதம் அனுப்பி உத்தவ் தாக்கரே
யின் முதல்வர் பதவியின் முடிவை தேர்தல் கமிஷன் பக்கம் தள்ளி விட்டார்.
தேர்தல் கமிசனும் உடனடியாக செயல்
பட்டு இன்று மகாராஸ்டிரா மேலவையில்
காலியாக உள்ள 9 இடங்களுக்கு வருகி ன்ற 21 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறது.

ஆக கவர்னர் சாமர்த்தியமாக தப்பி விட்டார் இந்தியாவில் மகாராஸ்டிரா மாநிலம் தான் கொரானா பதிப்பில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் உத்தவ் தாக்கரே பதவி இழந்து அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு மாநில நிர்வாகம் ஸ்தம்பித்து விடக்கூடும்.

அதனால் மகாராஸ்டிரா மேலும் பாதிப்ப டைய கூடாது என்கிற பிரதமரின் அறிவு ரையை கவர்னர் ஏற்றுக் கொண்டு செயல் படுத்தி இருக்கிறார்.கவர்னர் தன்னு டைய கடமையை சரியாக செய்து இருக்கிறார்.அதாவது மகாராஸ்டிரா அமைச்சரவை பரிந்துரைத்த படி உத்தவ் தாக்கரேவை
எம்எல்சியாக நியமிக்க மறுத்து தேர்தல்
மூலம் எம்எல்சியாக தேர்வாகி முதலமைச்சர் பதவியில் நீடிக்க வாய்ப்பு அளித்து இருக்கிறார்.

இதனால் மத்திய அரசு கவர்னர் மூலமாக
உத்தவ் தாக்கரேவை பழி வாங்கி விட்டது
என்கிற கெட்ட பெயர் ஏற்படாமல் பார்த்து
கொண்டார். இனி தேர்தல் கமிசன் தேர்தல் நடத்தி முடிவை அறிவிக்கட்டும் என்று புத்திசாலித்தனமாக ஒதுங்கி விட்டார். தேர்தல் கமிசனும் வருகின்ற 21 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்து விட்டது.

இந்த நிலையில் உத்தவ் தாக்கரே என்கி ற தனி மனிதரின் முதல்வர் பதவியை
தக்க வைக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் கமிசன் இந்த அசாதாரண சூழ்நி லையிலும் மகாராஸ்டிரா மேலவைக்கு தேர்தல் நடத்துவது தேவையா? என்கிற
விமர்சனங்கள் வரும்.இதனால் மகாராஸ்டிராவில் மேலவை இடைத்தேர்தலுக்கு தடை கேட்டு சிலர் கோர்ட்டுக்கு போகலாம். நிச்சயமாக போவார்கள் இதனால் நீதிமன்ற ம் இதில்
தலையிட்டு தேர்தல் .தாமதிக்கப்பட லாம்.

ஏனென்றால் கடந்த மார்ச் 12 ம் தேதி தெலுங்கானாவில் காலியாக உள்ள 3
சட்ட மேலவை இடங்களுக்குவேட்பு மனுத் தாக்கல் செய்ய தேதி அறிவித்து ஏப்ரல் 7 ம் தேதி ஒட்டுப் பதிவு என்று அறிவித்தது. கடைசியில் கொரானாவை முன் வை த்து தேர்தலை தள்ளி வைத்தது தேர்தல் கமிசன்.

அதே மாதிரி நாடு முழுவதும் காலியாக உள்ள 18 ராஜ்ய சபா இடங்களுக்கு மார்ச் 26 ம் தேதி நடைபெற இருந்த தேர்தல்களை தள்ளி வைத்தது. அதாவது இந்திய பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களை தீர்மானிக்கும் எம்பிக்கள் உடைய ராஜ்யசபாவிற்க்கே கொரானாவினால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்இந்தியாவில் கொரானா அதிகமாக பரவியுள்ள மகாராஸ்டிராவில் மட்டும் இப்பொழுது மேல் சபை இடைத் தேர்தல் நடத்த தேர்தல் கமிசன் எடுத்த முடிவு எந்த விதத்தில் நியாயமாகும்? என்று
பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால் தேர்தல் கமிசனின் முடிவை நீதிமன்றம் கேள்வி கேட்கும்.
எனவே தேர்தல் கமிசன் தேர்தல் தேதி
அறிவித்ததால் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்று உறுதியாக கூற முடியாது.

இப்பொழுது இன்னொரு பஞ்சாயத்து
சிவசேனா கூட்டணிக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதாவது தன்னுடைய முதல்வர் பதவி நீடிக்க பிரதமரிடம் உதவி
கேட்ட உத்தவ் தாக்கரே மீது தேசியவாதகாங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் அதே நேரத்தில் இக்கட்டான நேரத்தில்
உதவிய மோடி மீது சிவசேனா எம்எல்ஏக்கள் நன்றியுடன் இருக்கிறார்கள். அதனால் இதன் மூலமாக மகாராஸ்டிரா அரசியலில் குழப்பங்கள் அதிகரிக்கும்.

எனவே கவர்னர் தன்னுடைய அதிகாரத்தை பயன் படுத்தி ஒரே நாளில் ஒரேவார்த்தையில் உத்தவ் தாக்கரேவை எம்எல்சியாக நியமித்து இருக்க வேண்டிய சூழ்நிலையில் தேர்தல் கமிசன் பக்கம் அதை தள்ளி விட்டு மிக சாமர்த்தியமாக தன்னுடைய பெயரையும் மத்திய அரசின் பெயரையும் காப்பாற்றி இருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது அனைவர் மனதிலும் எழும் கேள்வி உத்தவ் முதல்வராக தொடருவரா இல்லை ஆட்சி கலையுமா என்பதுதான். அதற்கு நீதிமன்றம் விரைவில் விடை சொல்லிவிடும்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*