விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ரெடி ! 19 மாசம்தான் ஸ்டாலின் கதறல்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ரெடி ! 19 மாசம்தான் ஸ்டாலின் கதறல்?

Loading...

தேர்தல்களம்.

தமிழக அரசியல்களம் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடை தேர்தலை முன்வைத்து மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தற்போது இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை விட திமுக வெற்றி பெற்றாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. காரணம் தற்போது இடைத்தேர்தலை சந்திக்கும் இரண்டு தொகுதிகளுமே திமுக கூட்டணி வசமுள்ள தொகுதிகள்.

Loading...

அடுத்தது தற்போது மீண்டும் திமுக தோல்வியை தழுவினால் மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு காரணம் இனி திமுக ஆட்சியை பிடிக்க முடியாது என திமுகவிற்கு எதிர் அரசியல் செய்யும் கட்சிகள் சொல்வதற்கு அதிக வாய்ப்புகள் கிடைத்துவிடும் இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் அதன் இளைஞர் அணி தலைவர் உதயநிதி போட்டியிடலாம் என முன்னணி தலைவர்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்க அதனை கடுமையாக மறுத்துவிட்டார் ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டியிடுவது சரியாக இருக்காது வன்னியர் வேட்பாளர் நின்றால் மட்டுமே வெற்றிபெற முடியும்.

மேலும் உதயநிதியை வீழ்த்த பாஜக அதிமுக பாமக என போட்டி போட்டு வேலை பார்ப்பார்கள் அத்துடன் சாதி ரீதியாக ஓட்டுகள் திமுகவிற்கு விழாது இன்னும் சட்டமன்ற பொது தேர்தலுக்கு 19 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் உதயநிதியை இறக்கி அது தோல்வியில் முடிந்தால் அவரது அரசியல் எதிர்காலத்திற்கே எதிராக போய்விடும் என்று மறுத்துவிட்டாராம் ஸ்டாலின்.

இந்நிலையில் பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணியை தரக்குறைவாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் பேசினார் இதனால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க பாமக முறையாக திட்டமிட்டுள்ளது, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது விக்கிரவாண்டி தொகுதியில் தனித்து போட்டியிட்ட பாமக 45 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது திமுக சார்பில் விக்கிரவாண்டியில், தி.மு.க மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத், ஜனகராஜ், அன்னியூர் சிவா, ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி கலைச் செல்வன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்கிறார்கள்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*