காடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டா? கோஷ்டி மோதலால் பரபரப்பு!

காடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டா? கோஷ்டி மோதலால் பரபரப்பு!

Loading...

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள காடுவெட்டியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையிலான கோஷ்டி மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

மறைந்த வன்னியர் சங்க தலைவரான காடுவெட்டி குருவுக்கு கனலரசன் என்ற மகன் உள்ளார். அவருக்கும் பாமக தலைமைக்கும் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனலரசனின் வீட்டுக்கு அருகில் இருக்கும் சின்னப்பிள்ளை என்பவரோடு முன் தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது.

Loading...

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கனலரசன், அவரது சகோதரியின் கணவர் மனோஜ், மனோஜின் சகோதரர் மதன் ஆகியோரை, சின்னப்பிள்ளை, அவரது மகன் ஐயப்பன், சின்னப்பிள்ளை தம்பி காமராஜ், அவரது மகன் சதீஷ் ஆகியோர் தாக்கியதுடன், அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் மூவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. கனலரசன் தரப்பின் தாக்குதலில் காமராஜ் மகன் சதீஷுக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த காயமடைந்தவர்களுக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தற்போது தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இது சம்மந்தமாக மீன்சுருட்டி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*