4 பேருக்கு மேல் கூடக்கூடாது… தூத்துக்குடி போலிஸார் அதிரடி உத்தரவு!

4 பேருக்கு மேல் கூடக்கூடாது… தூத்துக்குடி போலிஸார் அதிரடி உத்தரவு!

Loading...

தூத்துக்குடியில் நாளை 4 பேருக்கு மேல் பொது இடத்தில் கூடக்கூடாது என்று போலிஸ் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இப்போதுதான் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலிஸார் நாளை 4 பேருக்கு மேல் கூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Loading...

இதற்குக் காரணம் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 15 பேரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலில் நாளை என்பதே ஆகும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள் கூடுவதையும் அதன் மூலம் பிரச்சனைகள் எழும்பாமல் பார்த்துக்கொள்ளவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் சட்டப் போராட்டம் நடத்தி வந்தனர். அதில் பல அரசியல் கட்சிகளும் பங்கெடுத்துக் கொண்டன. அதன் ஒரு பகுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட முயன்றபோது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியாகினர். ஆனால் அரசு தரப்பிலோ பொதுமக்கள் போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்து விட்டதாக சொல்லப்பட்டது. தமிழகமெங்கும் பரவலால அதிர்வுகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் அந்த ஆலையை தமிழக அரசு சிறப்பு சட்டத்தின் மூலம் மூடியது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*