Connect with us

#24 Exclusive

தூத்துக்குடி தோல்வி எதிரொலியா? என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என முழுபக்க அறிக்கை !!!

திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் உள்ளாட்சி தேர்தலில் ஏறக்குறைய சம அளவில் வெற்றிபெற்றுள்ளன, குறிப்பாக 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 13 இடங்களிலும், அதிமுக கூட்டணி 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன, சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு கூட்டணியும் சம அளவில் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் கனிமொழி வசம் ஒப்படைக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்துள்ளது, பாராளுமன்றத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுக இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் 5 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது, அதிலும் குறிப்பாக எங்கெல்லாம் இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்களோ அந்த பகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறவில்லை.

தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுக கூட்டணி 12 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது, இதனால் திமுக தலைமை கனிமொழி மீது பெரிதாக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து அக்கறை கொண்டதாக தெரியவில்லையாம், போதாதகுறைக்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்களை திமுக தலைமை தொடர்பு கொண்டு சரளமாக திட்டி தீர்த்ததாக கூறப்படுகிறது.

Loading...

அதற்கு மிக முக்கிய காரணம் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பல போராட்டங்கள்நடத்தி தூத்துக்குடி மக்களை ஆளும்கட்சிக்கு எதிராக திருப்பிய நிலையில் தற்போது அதிமுக வெற்றி பெற்றது அவை அனைத்தையும் பொய் என நிரூபித்துவிடுமோ என அச்சத்தில் உள்ளனராம், இதனை அடுத்து கனிமொழி தனது பிறந்தநாளை குடியுரிமை சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு இருக்கும் நேரத்தில் வருகின்ற ஜனவரி 5 – ம் தேதி எனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

Loading...

ஆனால் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கனிமொழி பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தெரிவித்தது போன்று தெரியவில்லை என்றும் உண்மையில் தூத்துக்குடி உள்ளாட்சி தேர்தலில் படு தோல்வியடைந்த நிலையில் இந்த நேரத்தில் பிறந்தநாள் கொண்டாடினால் அது சரியாக இருக்காது என்று கருதியே அவர் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending