நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு: ரஜினிக்கு விசாரணை ஆணையம் அதிரடி உத்தரவு

நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு: ரஜினிக்கு விசாரணை ஆணையம் அதிரடி உத்தரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் ஆணையத்திடம் தனக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு ஒன்றை அளித்தார்

இந்த மனு மீதான முடிவை நேற்று விசாரணை ஆணையம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி ரஜினியின் கோரிக்கை ஏற்பட்டதாகவும் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும், அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் கொண்ட பேப்பர் சீலிட்ட கவரில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கவரை அவரது வழக்கறிஞர் ரஜினியிடம் ஒப்படைப்பார் என்றும், ரஜினி இந்த கேள்விகளுக்கு இன்னும் ஓரிரு நாள்களில் பதில் எழுதி அதனை விசாரணையத்திற்கு அனுப்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...
Loading...

TNNEWS24 TEAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *