Connect with us

#24 Exclusive

டிரம்ப் குறுக்குவழியில் செல்லமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை போர் மூண்டால் யாருக்கு பாதிப்பு பானு கோம்ஸ் விளக்கம் !

ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே போர் உருவாகலாம் என்ற பதற்றம் அதிகரித்துவரும் சூழலில் இரு நாடுகளுக்கு இடையே போர் வந்தால் என்ன நடக்கும்
என்று பானுகோம்ஸ் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் பின்வருமாறு :-
அமெரிக்கா & ஈரான் இடையிலான போர் பதற்றம்…நேற்று இரவு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் இயங்குதளம் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு மேலும் அதிகரித்திருக்கிறது.

சர்வதேச சந்தையில்.. கச்சா எண்ணையின் விலை மேலும் அதிகரித்து..ஷேர்களின் விலை மேலும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தங்கத்தின் விலை மேலும் கூடி இருக்கிறது.
ஒரு வருடத்திற்குமுன் அமெரிக்கா ஈரானுடனான அணுஆயுத ஒருங்கிணைந்த செயல்பாட்டு ஒப்பந்தத்தை புறக்கணித்து அதிலிருந்து வெளியேறியதாக அறிவித்த நிமிடத்திலிருந்து தொடங்கியது இந்த பதற்றம்.

ஈரானோ…அமெரிக்கா இல்லாவிட்டால் பரவாயில்லை.. பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா , சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று அறிவித்தது. ஆனால்…இந்த 5 நாடுகளும் இதை முழு மனதுடன் ஏற்பதில் சிக்கல்கள் இருந்தன. அதனால்..ஈரானின் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை.
இதற்கிடையில்.ஈரானின் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் தொடங்கின. ஈரானுக்கு வழங்க இருந்த 40 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 230 விமானங்கள் ..வழங்கப் படாமல் தடுத்து நிறுத்தப்பட்டன.

Loading...

2 லட்சம் ஈரானியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஈரானின் [ carpets ] தரைவிரிப்புகள் தயாரிப்பு துறை 30% உலக சந்தையை தன்வசம் வைத்துள்ளது. வருடத்திற்கு 5,400 டன் தரைவிரிப்புகளை ஏற்றுமதி செய்யும் ஈரான்.. பொருளாதார தடையால்..423 மில்லியன் டாலர் அளவிற்கு முதல் 6 மாதங்களிலேயே இழப்பை சந்தித்தது.ஈரானிடமிருந்து டாலருக்கு பதிலாக தங்கம் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என்றிருந்த நிலையில்..ஈரானுடனான தங்க பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப் பட்டது.

Loading...

சவூதி அரேபியா அமெரிக்காவின் பின் அணிவகுக்க …ஈரானுக்கு ரஷ்யா பின்னிருந்து உதவ…அரசியல் சதுரங்க வேட்டை ஆரம்பமானது.
பிரச்சினைகள் விஸ்வரூபமெடுத்தன.
ஈரானின் பயங்கரவாத ஊக்குவிப்பு நடவடிக்கைகள்..பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து நாடுகளை விலக செய்தன. மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலேயே ..ஈரானுக்கு ஆதரவு இல்லை.
அமெரிக்காவுக்கு உதவி செய்யும் இஸ்ரேலையும் தாக்கி அழிப்போம் என்கிறது ஈரான்.நேற்றைய இரவு தாக்குதல் ஆரம்பம் தான். தாக்குதல் தொடரும் என்கிறது ஈரான்.

விநாச காலே விபரீத புத்தி.
மத்திய கிழக்கு நாடுகள் ..எண்ணெய் வள நாடுகள் என்பதால்..பணம் கொழித்தாலும் …அரசியல் சதுரங்கத்தில் புத்திசாலித்தனமாக காய் நகர்த்தும் அளவிலான திறமைசாலிகள் இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் படுகிறது.ஆக மொத்தத்தில்.. போர் வருமா? என்றால்…ஈரான் சற்றே அடக்கி வாசித்தால்..போர் தடுக்கப் படலாம். இல்லையென்றால்..போர் வரக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.

ஏனெனில்..அமெரிக்காவில்.. போர் குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் அமெரிக்க காங்கிரசுக்கும் , படைகளை ஏவும் & வழிநடத்தும் அதிகாரம் அதிபருக்கும் உண்டு. அவசர காலங்களில்…அதிபர் படைகளை ஏவிவிட்டு..அதன் பின்னர்.காங்கிரசின் அனுமதியை ஒப்புக்கு பெற்றுக் கொள்ளும் குறுக்கு வழிகளும் உண்டு. டிரம்ப் குறுக்கு வழியில் செயல்படமாட்டார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இவ்வாறு தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் பானு கோம்ஸ்.

©TNNEWS24

Loading...

Trending