இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என டிரம்ப் சொன்னாரா தமிழக ஊடகங்கள் சொன்னது உண்மையா? சீனா அடிமைகள் சிக்கின !!

சீன கம்யூனிச அடிமைகள் இந்தியாவை போன்று அமெரிக்க ஊடகத்திலும் அதிக அளவு வளர்த்து இருக்கின்றன என்பது டிரம்ப்பின் பேட்டியை திரித்து கூறியதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம், டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு கொண்டு இருக்க எந்த ஊடகமும் டிரம்ப் பேசியதை வெளியிடவில்லை.

Loading...

டிரம்ப் அமெரிக்காவில் கொரோனா தாக்குதல் குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேட்டி அளிக்கிறார், அப்போது இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளோம் அவர்கள் நிராகரிக்கவில்லை காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார், அதற்கு வழக்கம் போல் அங்குள்ள கம்யூனிசம் பேசும் பத்திரிகையாளர் நீங்கள் கேட்டதை இந்தியா கொடுக்கவில்லை என்றால் பதிலடி இருக்குமா என கேட்க டிரம்ப் ஒருவேளை என குறிப்பிட்டார்.

ஆனால் இதை இங்கு இருக்கும் கம்யூனிச சீன அடிமை ஊடகங்கள் டிரம்ப் முன்வந்து இந்தியாவிற்கு பதிலடி கொடுப்பதாக கூறியதாக திரித்து கூறிவருகின்றன, இது குறித்து பானு கோம்ஸ் வெளியிட்ட தகவல் பின்வருமாறு :-டிரம்ப் அமெரிக்க ஊடகத்திடம் பேசும்போது ”இந்திய பிரதமரிடம் பேசினேன். இந்தியாவிடம் மருந்து கேட்டிருக்கிறோம்” என்று டிரம்ப் கூறுகையில் அங்குள்ள ஊடகவியலாளர் தான் .”இந்தியா மருந்து தரவில்லையெனில் அமெரிக்கா பதிலடி கொடுக்குமா?” என்று கேள்வி கேட்பது போல தூண்டி விடுகிறார்.

Loading...

அரசியல் செய்வதற்கு இது நேரமல்ல என்று புறம் தள்ளாமல் வழக்கம் போல அவரது பாணியில்’maybe-கொடுக்கப்படலாம் ‘ என்று பதிலளிக்கிறார் டிரம்ப்.
மருத்துவ உதவிகள் இந்தியாவிற்கும் தேவைப்படும் இந்த நேரத்தில் இந்தியாவுடனான அமெரிக்க
நட்பை குலைக்கும் வேலைகளை செய்கின்றன சீன சார்பு அமெரிக்க ஊடகங்கள்.

மருத்துவ நெருக்கடியை பயன்படுத்தி சீன எதிர்ப்பு அல்லது அமெரிக்க எதிர்ப்பு என்பதாக உருவகப்படுத்தி இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்த இங்குள்ள இந்திய உள்நாட்டு அரசியலும் முனையும்.மருந்துகளை மோடி அனுப்பிவைத்தாலும், வைக்காவிட்டாலும் இங்கு அதற்கேற்ப எதிர் பிரச்சாரங்கள் நடக்கும் .

அமெரிக்கா கேட்கும் ‘ Hydroxychloroquine ‘ வைரஸ் தொற்று உள்ள அனைவருக்குமான பொதுவான தடுப்பு மருந்தா? என்றால் அப்படி இல்லை. ஏற்கனவே வேறு சில குறிப்பிட்ட நோய் காரணிகளை உடையவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உயிர் பலி ஏற்படாமல் கட்டுப்படுத்த இம்மருந்து உதவுகிறது. Cardiotoxicity போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

சுவீடன் இம் மருந்தை வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு கொடுப்பதை இரண்டு நாட்களுக்கு முன் நிறுத்தி இருக்கிறது.அதனால் Hydroxychloroquine வைரஸ் தொற்று பதித்த அனைத்து நோயாளிகளுக்குமான பொதுவான தடுப்பு மருந்தும் அல்ல. இந்தியாவில் நமது தேவைக்கு அதிகமான இருப்பு உள்ளது. இன்னொரு புறம் தயாரிப்பும் முழு வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

மற்றபடி இதை வைத்து நடந்து கொண்டிருப்பப்பதெல்லாம் சர்வதேச அரசியல் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் இக்கட்டை பயன்படுத்தி நடக்கும் சீன அரசியல். என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உண்மைகளை திரித்து கூறிவரும் தமிழக ஊடகங்கள் தற்போது இந்த விஷயத்திலும் திரித்து கூறி சிக்கியுள்ளன.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*