மோடி குறித்த விமர்சனம் பத்திரிகையாளர்கள் மூக்கை உடைத்த டிரம்ப் !!

அமெரிக்க பிரதமர் டிரம்ப் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தினை இந்தியா தரவில்லை என்றால் இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம் என மிரட்டியதாக தமிழக ஊடகங்களில் செய்தி வெளியானது, இதன் பிறகு விவாதங்கள் பரப்புரைகள் என நடந்த வண்ணம் இருந்தன.

Loading...

இந்த நிலையில் தமிழக ஊடகங்களில் ஒரே செய்தி வெளிவந்தது என்றால் அதனை முழுமையாக ஆராயாமல் பதில் சொல்ல கூடாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஒன்று இருக்கிறது ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முஸ்லீம் என்பதால் அப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்க மாட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக செய்தி வெளியானது.

ஆனால் உண்மையில் அப்பெண்ணிற்கு அது 7 வது பிரசவம் என்பதாலும் ரத்தம் சோகை அதிகம் இருப்பதால் மாவட்ட மருத்துவமனைக்கு செல்ல நாங்கள் அறிவுறுத்தியதாக மருத்துவமனை தெரிவித்து வதந்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

இதுபோல் நடந்ததை வேறு விதமாக சொல்லும் தமிழக ஊடகங்கள் அதே தவறை டிரம்ப் பிரஸ் மீட்டிலும் செய்தனர், நீங்கள் இந்தியாவிடம் கேட்ட ஹைட்ரோகிளோரோகுயின் மாத்திரைகள் என்ன ஆச்சு என கேட்க நாங்கள் இந்தியாவிடம் கோரிக்கை வைத்தோம் அவர்கள் அதை நிராகரிக்கவில்லை விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

உடனே மற்றொரு லெப்ட் பத்திரிகையாளர் இந்தியா இக்கட்டான நேரத்தில் மாத்திரையை தரவில்லை என்றால் அவர்களுக்கு பதிலடி இருக்குமா என கேட்க டிரம்ப் maybe என்று தெரிவித்தார், இது தான் அவர் பேசியது, பத்திரிகையாளர் கேட்க அதற்கு டிரம்ப் பதில் அளித்தார், ஆனால் தமிழக ஊடகங்கள் மோடியை எச்சரித்த டிரம்ப், இந்தியாவை எச்சரித்த டிரம்ப் என ஆளுக்கு ஒரு கதையை இட்டு கட்டிகூறிவிட்டன.

இந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி நள்ளிரவில் டிரம்ப் தெரிவித்த கருத்து லிபரல் கிண்டல் செய்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, டிரம்ப் குறிப்பிட்டதாவது :அசாதாரண நேரங்களுக்கு நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. HCQ?மாத்திரையை எங்களுக்கு அளித்த முடிவுக்கு இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி.இதை எப்போதும் மறக்க மாட்டேன்! இந்த போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனிதநேயத்திற்கும் உதவுவதில் உங்கள் வலுவான தலைமைக்கு நன்றி பிரதமர் மோடி என குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் இப்போது சீனா ஆதரவு கம்யூனிச ஆதரவாளர்களை கலக்கம் அடைய செய்துள்ளது, உலக தலைவராக மோடியை டிரம்ப் புகழ்ந்ததை வைத்து, டிரம்ப் மிரட்டியதாக கதையளந்தவர்கள் தற்போது எல்லாம் வீணாகி போச்சே கவலையில் உட்க்கார்ந்துள்ளனர், உலக வல்லரசு நாடுகளே இந்தியாவிடம் உதவி கேட்பதும், உலக தலைவர் மோடி என புகழுவதும் இடது போராளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிரம்ப் இந்தியாவை மிரட்டினாரா என இட்டுக்கட்டி மோடியை விமர்சனம் செய்த பத்திரிகையாளர்களின் மூக்கினை ஒரே ட்வீட் மூலம் உடைத்துள்ளார் டிரம்ப்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*