அமெரிக்காவில் கிளர்ந்தெழுந்த போராட்டம் – பதுங்கிய ட்ரம்ப்!

அமெரிக்காவில் கிளர்ந்தெழுந்த போராட்டம் – பதுங்கிய ட்ரம்ப்!

Loading...

அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவர் வெள்ளையின போலீஸாரால் கொல்லப்பட்ட நிலையில் அதற்கெதிரான போராட்டம் விஸ்வரூபமாக கிளர்ந்தெழுந்துள்ளது.

அமெரிக்காவின் மினியபோலிஸ் பகுதியில் நிறவெறி காரணமாக காவல்துறையினராக கருப்பினத்தவரைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை வெள்ளையினத்தைச் சேர்ந்த போலிஸார் கழுத்தில் காலை வைத்து மிதித்தேக் கொன்றுள்ளனர். இது சம்மந்தமாக போலிஸார் இந்த கொடூரத்தை எடுத்துக் காட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பிளாய்டு ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை. என்னைக் கொல்லாதீர்கள்’ எனக் கூறிக்கொண்டே இறப்பது காண்பவர்களை குலையச் செய்கிறது.

Loading...

இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த நிறவெறி கொடூரத்துக்கு எதிராக கருப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல் நிலையத்தின் நுழைவாயிலுக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்தனர். இந்த போராட்டங்களால் பல இடங்களில் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் நின்று ‘எங்களால் மூச்சு விடமுடியவில்லை’ என கோஷம் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்த போராட்டக்காரர்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குண்டர்கள் என விமர்சித்தது மேலும் கண்டனங்களை எழுப்பியது. இதையடுத்து போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமானதால் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனால் ட்ரம்ப் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள பாதாள பாதுகாப்பு பங்கருக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் அவர் மேல் தளத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.இந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*