உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளித்த ட்ரம்ப் – என்ன செய்தார் தெரியுமா?

உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளித்த ட்ரம்ப் – என்ன செய்தார் தெரியுமா?

Loading...

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை திண்டாடச் செய்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கைகள், தடுப்பு முறைகள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டி வருகிறது. ஆரம்பத்தில் சீனாவில் கொரோனா பரவியபோதே, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தது அமெரிக்கா. இதனால் உலகிலேயே அதிக கொரோனா தொற்று உள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

Loading...

ஆனால் அமெரிக்காவோ உலக சுகாதார நிறுவனம் சீனாவுடன் கைகோர்த்து உண்மையை மறைத்துவிட்டது எனப் பழிகூறி வந்தது. மேலும் உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியைக் குறைக்க போவதாகவும் எச்சரித்து வந்தது. ஆனால் சீனாவோ வழக்கத்தை விட அதிக நிதியைக் கொடுக்க ஆரம்பித்தது. இந்நிலையில் இப்போது உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக உ.சு.நி-ல் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது அமெரிக்க மக்களுக்கே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*