உண்மைதான் தஞ்சையில் வந்துவிட்டது விமானப்படைத்தளம் ! அவசரமாக படை தளத்தை உருவாக்கும் இந்திய இராணுவம் எதற்காக?

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் இலங்கை மாலத்தீவு உட்பட ஒட்டு மொத்தமாக 1000 கிலோ மீட்டர் சுற்றளவை கண்காணிக்கும் அளவிற்கு அதிரடி நடவடிக்கையில் இந்திய விமானப்படை இறங்கியுள்ளது, அதன் முக்கிய பகுதியாக பிரமோஸ் ஏவுகணை பொருத்திய சுகாய் விமானத்தை விமானப்படை நிலை நிறுத்த உள்ளது.

Loading...

இரண்டாம் உலகப்போரில் பங்குவகித்த புகழ்பெற்ற தஞ்சை விமானப்படை தளம் மீண்டும் உயிர்ப்பிக்க பட்டு வருகிற ஜன..20, ஆம் தேதி முதல் தஞ்சை விமானப்படை செயல்பட உள்ளது, இந்திய விமானப்படையின் 222-வது படையணி பிரம்மாஸ் ஏவுகணை பொருத்தப்பட்ட அதிநவீன சுகோய்30 எம் கே ஐ விமானங்களுடன் தனது சேவையை துவங்க உள்ளது.

இந்திய பெரும்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை முழுவதும் ஒடுக்கும் நடவடிக்கைகளில் இந்திய இராணுவம் இறங்கியுள்ளது , அவற்றில் முக்கியபணியாக இலங்கை வருவதாக கூறி அடிக்கடி இந்திய எல்லைகளை உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் சீனா கப்பல்கள் ஈடுபட்டு வருகின்றன, பல முறை எச்சரித்தும் சீனா திருந்துவதாக இல்லை எனவே நேரடியான தாக்குதல் கொடுத்தால் மட்டுமே அடங்கும் என்ற நிலைக்கு இந்தியா வந்துள்ளது.

Loading...

எனவே தென் கடற்பரப்பை முழுவதும் கண்காணிக்கும் விதமாக சுகாய் விமானம் நிலை நிறுத்த படுகிறது அதை விட முக்கியமாக தஞ்சையில் நிலை நிறுத்தப்படும் சுகாய் விமானத்தில் பிரமோஸ் ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது, அனைத்து சுகாய் விமானங்களும் பிரமோஸ் ஏவுகணை பொருத்தும் திறனை பெற்றிருக்காது, அதன்படி பார்த்தால் எந்த அளவு முக்கியத்துவம் கருதி தஞ்சை விமானப்படை தயார்செய்யப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தற்போது சீனாவிற்கு முழுவதும் செக் வைக்கப்பட்டுள்ளது இனி இலங்கை செல்கிறோம், கப்பல்களுக்கு பாதுகாப்பிற்கு செல்கிறோம் என கூறி சீனா இந்திய எல்லைக்குள் வந்தால் நேரடியான தாக்குதல் இருக்கும் என இந்திய இராணுவம் நேரடியாக குறிப்பிட்டு விட்டது. தஞ்சை விமானப்படை தளத்தில் இருந்து சுகோய் விமானங்கள் இயங்கினால் ஒட்டுமொத்த தென்னிந்திய பகுதியும் அவற்றின் கண்காணிப்பு வீச்சின் கீழ் இருக்கும். நான்கு திசைகளிலும் சுமார் 1000கிலோமீட்டர் (ஒட்டுமொத்த மாலத்தீவு, இலங்கையும் உள்ளடங்கும்) சுற்றளவுக்கு இனி பிரம்மாஸ் பொருத்தப்பட்ட சுகோய் விமானங்களின் பார்வையில் தான் இருக்கும்.

இந்தியாவின் அனைத்து பகுதிகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவர இந்திய இராணுவம் முழு முயற்சியில் இறங்கியுள்ளது இனி தென் பரப்பில் எந்த அந்நிய சக்திகளும் இந்திய இராணுவத்தின் கண்களில் படாமல் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3888 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*