Connect with us

#24 Exclusive

திருச்சி திமுகவிற்கு, தேனி அதிமுகவிற்கு மொத்தம் 27 மாவட்டங்களில் பாமக பாஜக, தேமுதிக, கம்யூ., விசிக விற்கு எத்தனை மாவட்டங்கள் இதோ?

தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று தொடங்கி தற்போதுவரை எண்ணப்பட்டு வருகின்றன, இதில் 90% இடங்களுக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன, இதில் பெரும்பாலும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் அதிக அளவில் முன்னிலையில் உள்ளனர்.

மொத்தம் 27 மாவட்டங்களில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 13 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் கைப்பற்றியுள்ளன, இதில் சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சரிசமமாக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அங்கு யார் மாவட்ட சேர்மனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது மறைமுக தேர்தலுக்கு பின்பே தெரியவரும்.

அதிமுக கூட்டணி கைப்பற்றிய 13 மாவட்டங்கள் :- தேனி, தூத்துக்குடி, நாமக்கல்,விருதுநகர், கோவை, சேலம், தருமபுரி,திருப்பூர், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையான மாவட்ட கவுன்சிலர் இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது.

Loading...

திமுக கூட்டணி கைப்பற்றிய இடங்கள் :- திருச்சி, திண்டுக்கல், தஞ்சை திருவண்ணாமலை, திருவள்ளூர்,
திருவாரூர், நாகை, நீலகிரி, புதுக்கோட்டை , மதுரை,பெரம்பலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது, சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டு கட்சிகளும் தலா 8 மாவட்ட கவுன்சிலர் இடங்களை கைப்பற்றி சரி சரிசமாக உள்ளன.

Loading...

இதில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜகவிற்கு 1, பாமாவிற்கு -2, தேமுதிகவிற்கு 1 என அதிமுக மாவட்ட சேர்மன் பதவிகளை கொடுக்க முன்வந்துள்ளது, அதே நேரம் திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுக்கு தலா 1 மாவட்ட சேர்மன் பதவி கொடுக்க திமுக முடிவெடுத்துள்ளது அதே நேரம் விடுதலை சிறுத்தைகள் எங்கும் வெற்றி பெறாததால் அவற்றை பெரிதாக திமுக கூட்டணி கண்டுகொள்ளவில்லை.

தற்போதைய நிலவரப்படி திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக, பாமக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகள் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இடங்களை சேர்த்து சுமார் 100 இடங்களுக்கு மேல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மதிக்கத்தக்க அளவில் தங்களது உள்ளாட்சி பிரதிநிதிகளை கைப்பற்றியுள்ளனர்.

Loading...

Trending