பொறிவைத்து பிடித்த வனத்துறை சிக்கியது சிறுத்தை

பொறிவைத்து பிடித்த வனத்துறை சிக்கியது சிறுத்தை

Loading...

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் இரண்டு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 3 வயது பெண் சிறுத்தை பிடிபட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மணி முத்தாறு பகுதியில் இராமர் என்பவர் கால்நடை  வளர்ப்பு மற்றும் விவசாய தொழில் செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இராமர் என்பவர் வளர்த்து வந்த ஆடுகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக காணாமல் போனது, இதனையடுத்து வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி ஆடுகளை
கண்காணித்து வந்தார்.

Loading...

அப்போது ஆடுகளை சிறுத்தை  தூக்கிச் செல்வது போன்ற காட்சி cctv_ யில் பதிவானது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இராமர் வனத்துறையினரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்கு வனப்பகுதிக்குள் வைத்த கூண்டில் 3 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை சிக்கியது. சிறுத்தையை மீட்ட வனத்துறையினர் அடர் வனப் பகுதிக்குள் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*