அஜித் தோவலுக்கு கூடுதல் பொறுப்பு, ஒருவரும் தப்பிக்க கூடாது என மோடி உத்தரவு !!

அஜித் தோவலுக்கு கூடுதல் பொறுப்பு, ஒருவரும் தப்பிக்க கூடாது என மோடி உத்தரவு !!

Loading...

இந்தியாவில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் பெரும்பாலும் பலனை கொடுத்த நிலையில் இன்றும் இரண்டு நிகழ்வுகள் மத்திய அரசிற்கு உறுத்தலை உண்டாக்கியுள்ளன அதில் ஒன்று டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாடு, மற்றொன்று அதில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் செயல்பாடு.

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலான நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களில் 90% பேர் அம்மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள்தான் மற்றொன்று அதில் கலந்து கொண்ட வெளிநாட்டவர் எண்ணிக்கை.

Loading...

தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள அந்தந்த மாநில அரசுகள் அறிவுறுத்திய நிலையில் பலர் அதனை பயன்படுத்தி கொண்டு சிகிச்சை செய்ய முன்வந்தனர், ஆனால் அதே போன்ற ஒரு தரப்பு பல பகுதிகளில் தற்போதுவரை பதுங்கி வாழ்வதாக கடுத்தப்படுகிறது.

கடந்த வாரத்தில் கூட உத்திர பிரதேசம் மாநிலத்தில் 20 க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டனர், மேலும் வெளிநாட்டை சேர்ந்த பலர் சுற்றுலா விசாவில் வந்துவிட்டு மசூதிகளில் இருந்துள்ளனர், அரசு தாமாக வெளிவந்து விபரங்களை கொடுக்க வலியுறுத்தியும் இவர்கள் வெளிவராமல் பதுங்கி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில்தான் உள்துறை அமைச்சகம் சந்தேகப்படும் நபர்களின் விசாவினை முடங்கியுள்ளது, இதனை அடுத்து பிரதமர் அலுவலகத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் குறிப்பாக மசூதிகளில் தங்கி இருந்தவர்களின் நோக்கம் குறித்து முழுமையான தகவலை அறிய 6 பேர் கொண்ட உயர்மட்ட தகவல் திரட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்குழுவை வழிநடத்தும் பொறுப்பை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வசம் நேரடியாக பிரதமர் மோடி வழங்கியுள்ளார், தற்போது முழுமையாக சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் உள்நாட்டு பாதுகாப்பு மிகவும் முக்கியம் எனவே வெளிநாட்டில் சந்தேகத்திற்கு இடமாக தங்கியவர்கள் குறித்த முழு விபரமும் மே மாதம் இறுதிக்குள் வரவேண்டும் எனவும் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரும் தப்பக்கூடாது என தோவலுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

மாநில வாரியாக தற்போது தனித்தனி குழு அமைக்கப்பட்டு அக்குழு கண்காணிப்பு பணியில் இறங்கியுள்ளது எனவே கொரோனா முடிவிற்கு வரும் சூழலில் மிக பெரிய அதிரடி மாற்றங்கள் நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது, குறிப்பாக தமிழகம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்துதான் நடவடிக்கை தொடங்க இருக்கிறதாம்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*