Connect with us

#24 Exclusive

ஈரானிய தளபதி மீதான அமெரிக்க தாக்குதல், மத்திய கிழக்கில் கடும் பதற்றம் !!

ஈரானிய ராணுவத்தின் குத்ஸ் படைப்பிரிவின் தலைவராக இருந்தவர் மேஜர் ஜெனரல் காஸெம் சொலைமானி. இவர் ஈரானிய ராணுவத்திலும் அரசு கட்டமைப்பிலும் மிக முக்கியமானவர், இவருடைய பங்களிப்பு தான் அந்த பிராந்தியத்தில் ஈரான் இவ்வளவு வளர காரணம் என்று சொல்லப்படுகிறது. மத்திய கிழக்கில் ஈரானுக்கு சாதகமான அனைத்து காய்நகர்ததல்களின் மூளையாக செயல்பட்டவரும் இவர் தான். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பல வருடங்களாக இவர் மீது குற்றச்சாட்டுகள் கூறி வந்தன, ஈராக்கில் பணியாற்றிய பல நேட்டோ படையகனரின் மரணத்திற்கு இவரும், இவரது குத்ஸ் படையும், இவர்களின் ஆதரவு பெற்ற பிராந்திய ஆயத குழூக்களுமே ஆகும் என கூறி வந்தனர். இவர்களுக்க எதிரான பல குற்ளச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் மேற்கு நாடுகள் கடந்த காலங்களில் வெளியிட்டுள்ளன.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க விமானப்படை நடத்திய தாக்குதலில் பாப்புலர் மொபிலைஸேஷன் ஃபோர்ஸ் என்கிற ஈரானிய ஆதரவு பெற்ற ஆயுத குழுவின் உறுப்பினர்கள் 21பேர் கொல்லப்பட்டும், 50க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆயுத குழுவினர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பேரணியாக சென்று அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு சூறையாடினர். இதற்கு பதிலடியாக அமெரிக்கா உடனடியாக தனது படைகளை குவைத் மற்றும் அமெரிக்காவிலிருந்து பாக்தாத் நோக்கி நகர்த்தியது.

சேதமடைந்த அமெரிக்க தூதரகம்

ஆனால் தனது தூதரகம் வரை வந்து கடும் சேதம் விளைவித்தவர்கள் மீது கடுப்பில் இருந்த அமெரிக்கா, பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களது நடவடிக்கைகள் தொடரும் என்றது. இந்நிலையில் இன்று ஈராக் தலைநகர் பாக்தாத் சென்ற ஈரானிய ராணுவத்தின் குத்ஸ் படைப்பிரிவு தலைவர் கஸெம் சொலைமானியை குறிவைத்து அமெரிக்கா ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அவரை வரவேற்க சென்ற பாப்புலர் மொபிலைஸேஷன் ஃபோர்ஸ் ஆயுத குழுவின் துணை தலைவர் அபு மஹ்தி அல் முஹாந்திஸ் மற்றும் சிலர் கொல்லப்பட்டனர்.

Loading...
அபு மஹ்தி அல் முஹாந்திஸ்

இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின்படி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் ஈரானிய தலைவர் அலி கமானி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கசப்பான நிகழ்விற்கு காரணமானவர்கள் மிக மிக கசப்பான முடிவை சந்திப்பார்கள் என கூறியுள்ளார். ஈரானிய அதிபர், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஈரானிய ராணுவ தளபதிகள் ஆகியோர் இதனையே பிரதிபலிக்கிறார்கள்.

Loading...
அமெரிக்க தாக்குதலுக்குள்ளான வாகனம்

இந்த நிகழ்வு வளைகுடா மற்று மத்திய கிழக்கில் கடுமையான பதற்றத்தை உருவாக்கி உள்ளது, கச்சா எண்ணெய் சந்தையிலும் இது எதிரொலிக்கிறது – இந்த தாக்குதலுக்கு பின்னர் கிட்டத்தட்ட 4%வரை கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது. மேலும், நிச்சயமாக ஈரான் தரப்பு இதற்கு பதிலடி கொடுக்க முனையும் ஆனால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை காலம் தான் கூறும்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending