Connect with us

#24 Exclusive

நாளை நடக்கும் திமுகவின் போராட்டதின் ஆணிவேருக்கு ஆப்பு வைத்தது மத்திய அரசு !

சென்னை :- திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாளை ( டிசம்பர் -23) சென்னையில் முழுவதும் முழு அளவில் போராட்டம் நடத்த திமுக தயாராகி வருகிறது, இதற்கு மாணவர் அமைப்பு, தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்புகளுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரியும், வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியுள்ள முஸ்லீம் அகதிகளுக்கு குடியுரிமை மறுக்க பட்டதை கண்டித்தும் திமுக குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளது, இந்த சூழலில்தான் திடீரென திமுக இலங்கை தமிழர் விவகாரத்தை கையில் எடுப்பதை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர், ஏனெனில் இலங்கையில் உச்சகட்டமாக தமிழர்கள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கொல்லப்பட்ட போது மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தது திமுக.

அன்று திமுக எண்ணியிருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து போரில் தமிழர்கள் கொல்லப்படாமல் தவிர்த்திருக்கலாம், அவர்களும் தங்கள் சொந்த நாட்டில் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள், ஆனால் அப்போது விட்டுவிட்டு இப்போது இலங்கை தமிழர்களுக்கு திடீர் என திமுக இரக்கம் காட்ட காரணம் என்ன என பலரும் கேள்வி எழுப்பினர்.

Loading...

இந்த சூழலில்தான் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு திமுக இலங்கை தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக போராட முடிவெடுத்திருப்பதை உளவு அமைப்புகள் கண்டறிந்துள்ளன, மேலும் நாளை நடக்கும் போராட்டத்தை மிக பெரிய அளவில் பிரமாண்டமாக கொண்டு செல்ல 90% ஊடகங்கள் பத்திரிகையாளர்களை திமுக அணுகி நாளை போராட்டம் குறித்த மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளனர்.

Loading...

அதிலும் குறிப்பாக நாளை பல்வேறு பகுதிகளில் கலவரம் நடக்கலாம் என்பதால் காவல்துறையினரை உஷாராக இருக்க மாநில அரசு அறிவித்துள்ளது, இந்த சூழலில் இலங்கை தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? அவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை என்று நாளை பிரமாண்ட அளவில் திமுக போராட்டம் நடத்தவுள்ள நிலையில், மத்திய அரசு இலங்கையை சேர்ந்த இந்து தமிழ் அகதிகளுக்கு மட்டும் இரட்டை குடியுரிமை வழங்க முடிவு எடுத்துள்ளதாம்.

இதுகுறித்த சட்ட திருத்தம் விரைவில் வெளிவர இருக்கிறது என்றும் தமிழக முதல்வரிடம் இதுகுறித்து உத்தரவாதத்தினை உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன, திமுக இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்க பட்டதாக நாளை போராட்டம் நடத்த உள்ள நிலையில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு திமுக எழுப்பிய இலங்கை தமிழர்கள் இந்துக்கள் இல்லையா என்று எழுப்பிய கூற்றின் படி இரட்டை குடியுரிமை வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் திமுக போராட்டம் எந்த வித அரசியல் லாபத்தையும் அடையாமல் இருக்க மத்திய அரசு முறையான நேரத்தில் ஆப்பு வைத்துள்ளது, மேலும் நாளை கலவரம், கடை உடைப்பு, பஸ் உடைப்பு ஏதாவது நடந்தால் அது திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தலில் பெருத்த அடியை கொடுக்கும் என்றும் இதனால் நாளை திமுக நடத்தும் போராட்டம் எந்த லாபத்தையும் பெறப்போவதில்லை என்றும் மாறாக சமீபத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை போன்று உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவிற்கு தோல்வியே கிடைக்கும் என்றும் குறைப்படுகிறது. எந்த இலங்கை தமிழர் விவகாரத்தை வைத்து திமுக இதனை ஆண்டுகளாக அரசியல் செய்ததோ அதையே திமுகவிற்கு எதிராக திருப்பியுள்ளது பாஜக

©TNNEWS24

Loading...

Trending