என்னது, டோக்யோ ஒலிம்பிக்கின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா…?

அடுத்த வருடம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஜப்பானின் டோக்யோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளது. இது 32 வது ஒலிம்பிக் போட்டி ஆகும். உலகின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக்கில் 33 வகையான விளையாட்டு போட்டிகளும், 206 நாடுகளில் இருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்வார்கள். இந்த போட்டிக்காக ஜப்பான் அரசு சுமார் 1லட்சம் கோடி செலவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

இந்த் ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி விட்டது. டிக்கெட் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் 1800 யில் தொடங்கி ரூபாய் 2 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படுகிறது. டிக்கெட் கேட்டு ஆன்லைனில் மூலமும் ரசிகர்கள் விண்ணப்பிக்கிறார்கள், அவர்களுக்கு குலுக்கள் முறையில் டிக்கெட்டுகள் ஒதுக்கப்படுகிறது. லட்சக்கணக்கான உள்ளூர் மக்களே டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் போட்டி ஒருங்கிணர்ப்பாளர்கள் ஒரு லுக்சூரி டிக்கெட்டை அறிமுகப்படுத்தினார்கள். அதாவது சகலவசதிகளையும் கொண்ட ஒரு டிக்கெட். இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை அவர்களுக்கு என்று தனி அறை , விதவிதமான உணவு, உணவு பானங்கள் என ஆடம்பரமாய் இருக்கும் இந்த டிக்கெட்டின் விலை 43 லட்சமாகும். மிகவும் சொகுசு வசதிகள் கொண்ட இந்த டிக்கெட்டுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது. அதனால் இதனை மேலும் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்ய ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.

Loading...

இதன்மூலம் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது. இந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக 70 லிருந்து 80 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யவுள்ளது. இதன் மூலம் 5000 கோடிக்கும் மேல் வருவாய் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் 80% டிக்கெட்டுகளை ஜப்பானிய மக்களுக்கும், மீதமுள்ள டிக்கெட்டுகளை வெளிநாட்டவர்களுக்கு கொடுப்போம் என்றனர். ஒலிம்பிக் போட்டியையொட்டி ஜப்பானிய ஓட்டல்களின் விலை மிகவும் அதிகமா அதிகரித்துள்ளது. சில ஓட்டல்கள் கட்டணத்தை அதிகமாக்குவதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களின் முன்பதிவை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகப்படியான 3 ஸ்டார் ஓட்டல்களில் ஒரு நாள் விலை 80 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக இருக்கிறது. போட்டி நேரத்தில் இது இன்னும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2667 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*