சபாஷ் சரியான போட்டி காவி டீவீட்டை நீக்க ஸ்டாலின் இதை செய்யவேண்டும் பாஜக சவால் ! ஸ்டாலினால் முடியுமா?

தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி அந் நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த நூலை வெளியிட்டார், மேலும் திருக்குறளை கூறி கூடியிருந்த மக்களுக்கு விளக்கம் அளித்தார். இது மோடியை பல நாட்களாக தீவிரமாக எதிர்த்து வரும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

Loading...

இந்நிலையில் தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் நெற்றியில் திருநீறுடன் காவி உடையணிந்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது. அவ்வளவுதான் எப்படி திருவள்ளுவருக்கு திருநீறு பூசலாம், காவி உடை அனுவிக்கலாம் என்ற திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கொந்தளிக்க தொடங்கிவிட்டனர், இதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்தார்.

ஆனால் தமிழக பாஜகவோ ஸ்டாலினுக்கு வேறு விதத்தில் செக் வைத்து விட்டது, அதாவது ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு மேற்கண்ட திருக்குறள் மற்றும் விளக்கத்தை ஸ்டாலின் பிழையில்லாமல் இரண்டு முறை சொல்லிவிட்டால் நீக்கி விடுவதாக சவால்விடுத்துள்ளது.

Loading...

நேற்றைய திருமணவிழாவில் மணமகன் பெயருக்கு பதிலாக மாமனார் பெயரை மாற்றி சொல்லிய ஸ்டாலினா பிழையில்லாமல் சொல்ல போகிறார் இதெல்லாம் நடக்குற காரியமா? என்று கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*