முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்!

Loading...

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நேற்றிரவு அவரது சென்னை இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87

சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார் என அவரது குடும்பத்தினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட டி.என்.சேஷன் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை தலைமை தேர்தல் கமிஷனராக பதவியில் இருந்தார்.

Loading...

இவரது பதவிக்காலத்தில் தான் தலைமை தேர்தல் கமிஷனருக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கின்றதா? என்று பொதுமக்களுக்கு மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் தெரிய வந்தது. டி.என்.சேஷன் தேர்தல் அதிகாரியாக இருந்த காலக்கட்டத்தில் தான் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அரசியல்வாதிகள் அழைத்து வரப்பட்டது தடுக்கப்பட்டது என்பதும், ஒரு வேட்பாளர் தேர்தலுக்காக எவ்வளவு செலவு செய்தார் என்பதை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்பதுமான பல சீர்திருத்தங்களை செய்தவர் டி.என்.சேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம் என்று ஒன்று உள்ளது என்பதையும் அதற்கான அதிகாரங்கள் என்ன என்பதையும் நாட்டு மக்களுக்கு உணர்த்திய டி.என்.சேஷன், அரசியல்வாதிகளுக்கு அடிபணியாமல் இந்தியா முழுவதும் தேர்தலை நியாயமாக நடத்திக்காட்ட முடியும் என்பதையும் உணர்த்தியவர். தேர்தல் ஆணையர் என்னும் பதவியின் உண்மையான அதிகாரம் என்ன என்பதை தேசத்துக்கே தெரியவைத்த டி.என்.சேஷன் என்பதில் நாம் அனைவருக்கு பெருமையே. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*