இப்படி ஒரு அரசியல் கணக்கு இருக்கிறதா? 2021 சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பு !!

2021 சட்டமன்ற தேர்தல் எப்படி அமையும், யாரெல்லாம் கூட்டணியில் இடம்பெறுவார்கள் எந்த கட்சிகள் தற்போதைய கூட்டணியில் இருந்து வெளியேறுவார்கள் என்பது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் தெரியவரும், ஆனால் அது குறித்து பலரும் தங்களது யூகங்களை கூறி வருகின்றனர் .

Loading...

அந்த வகையில் தற்போது திரு விஜயகுமார் தனது யூகத்தை வெளிப்படுத்தியுள்ளார் அது பின்வருமாறு :- 2021 சட்டமன்ற தேர்தலின் கேம் சேஞ்சர்-

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலின்
கேம் சேஞ்சராக இருக்கப்போகிறவர் யார்? என்பதற்கான விடையை தேடிக்கொ ண்டு இருக்கிறேன்.
இப்போதைய அரசியலில் மையமாக இருக்கும் எடப்பாடியும் ஸ்டாலினும் நிச்சயமாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கேம் சேஞ்சராக இருக்கப்போவது இல்லை.
ஏனென்றால் ஸ்டாலின் எடப்பாடி இருவருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமைய இருக்கும் ஆட்சியில் முதல்வராக
அமரும் யோகம் இல்லை.

Loading...

அதனால் வேறு ஒருவர் தான் தமிழக சட்டமன்ற தேர்தலின் தலைஎழுத்தை எழுத இருக்கிறார்.அது ரஜினியாக இருக்க முடியும் என்று நினைத்தால் கடந்த வாரம் அதிமுக அரசு மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக கருத்து கூறிய ரஜினி இந்த
நேரத்தில் மதுக்கடைகளை அதிமுக அரசு
திறந்ததன் மூலமாக அதிமுக மீண்டும்
ஆட்சிக்கு வருவது கனவாகி விடும் என்று தெரிவித்து இருந்தார்.

இதன் மூலமாக 2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியாளராக இல்லாமல் வழக்கம் போல பார்வையாளராகவே இருக்கவே விரும்புகிறார் என்றே தெரிகிறது. இந்த நிலையில் ரஜினியும் கேம் சேஞ்சர் இல்லை என்றே தெரிகிறது.

அடுத்து யாராக இருக்க முடியும் என்று
யோசித்து பார்த்தால் அது சசிகலாவாகவே இருக்க முடியும் என்று நினைக்கத் தோன்றுகிறது. நிறைய பேர் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் சசிகலா ஜெயிலில் இருந்து வந்த பிறகு தான் தமிழக அரசியலே மாற
இருக்கிறது. அந்த மாற்றத்தை தான் பி ஜேபி எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது
என்னடா சசிகலா ஜெயிலில் இருந்து
வருவதற்கும் பிஜேபிக்கும் என்ன சம்பந்
தம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

சம்பந்தம் இருக்கிறது.இப்போதைய தமி
ழக அரசியலை மாற்றும் சக்தி சசிகலா
விடம் மட்டுமே இருக்கிறது என்பதை பிஜேபி தெளிவாக அறிந்து வைத்து இருக்கிறது. இப்போதைய நிலைமையில் வருகின்ற
சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு
கிடைக்கும் என்று கேட்டால் கண்ணை
மூடிக் கொண்டு திமுக என்று கூறி விடு
வார்கள். இது தான் இப்போதைய உண்மையான நிலவரம்.

அதிமுக பிஜேபி கூட்டணிக்கு எதிரான சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து திமுக பின்னால்நிற்பதால் திமுக கூட்ட ணி வெற்றி கூட்டணியாக தெரிகிறது.
திமுக கூட்டணி உடைந்தால் தான் அதிமுக பிஜேபி கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
லோக்சபா தேர்தலில் மாபெரும் வெற்றி
பெற்ற திமுக கூட்டணியை வருகின்ற
சட்டமன்ற தேர்தலில் உடைக்க சசிகலாவினால் மட்டுமே முடியும். சசிகலா ஜெயிலில் இருந்து வந்தவுடன் அரசியலே வேண்டாம் என்று மன்னார்குடிக்கு போய்
செட்டிலாகி விட மாட்டார்.

மாறாக வந்தவுடன் அதிமுகவை கைப்பற்
றவே நினைப்பார்.30 ஆண்டுகளுக்கு
மேல் அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் சசிகலா வைத்து இருந்தார்.
அதிமுகவின் கட்சி பிரதிநிதிகள் எம்பி
எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் வரை சசிகலாவின் விருப்பம் இன்றி யாரும் பதவிக்கு வந்து இருக்க முடியாது.

அதனால் சசிகலா ஜெயிலில் இருந்து
வந்தவுடன் அதிமுகவில் இருந்து பாதி
அளவில் எம்எல்ஏ எம்பிக்கள் கட்சி பிரதி நிதிகள் சசிகலா பக்கமாக சென்று விடுவார்கள் என்பதால் அதிமுக மீண்டும்
உடைந்து விடும்.

பிஜேபி ஆதரவு அதிமுகவினர் ஓபிஎஸ்
தலைமையிலும் பிஜேபி எதிர்ப்பு அதிமுகவினர் சசிகலா தலைமையிலும் அணி வகுத்து நிற்பார்கள்.
இப்படி சசிகலா பக்கம் வரும் அதிமுகவினர் மூலமாக சசிகலா அதிமுக பலமாகிஇருக்கும். ஏற்கனவே சசிகலா பிஜேபி யினால் தான் ஜெயிலுக்கு சென்றார் என்று
கதை ஓடிக்கொண்டு இருக்கிறது. அதனால் சசிகலா அதிமுக வலுவான பிஜே பி எதிர்ப்பு அரசியலை எடுத்து செல்ல அந்த கதையே உதவி செய்யும்.

காங்கிரஸ் சசிகலா இடையே உள்ள உற வு என்பது மிக நீண்ட காலமானது. 1999ல் வாஜ்பாய் ஆட்சியை கவிழ்க்க காங்கி ரஸ் சசிகலா மூலமாக தான் ஜெயலலி தாவை வழிக்கு கொண்டு வந்தது.கர்நா
டகா சிறையில் காங்கிரஸ் ஆட்சியில் சசி கலா எப்படி ராஜ உபசரிப்புடன் இருந்தார்
என்பதை வைத்தே சசிகலா காங்கிரஸ்
நட்பை கூறி விடலாம்.

ஏற்கனவே திமுக காங்கிரஸ் இடையே உள்ள உறவு சரியில்லாத நிலையில் காங்கிரஸ் தன்னுடைய அடுத்த ஆப்சனா
க சசிகலா அதிமுகவை நோக்கியே செல்
லும்.அடுத்து வைகோ திருமாவளவன்
கம்யூனிஸ்ட்கள் என்று பலரும் சசிகலாவுடன் சேர்வதையே விரும்புவார்கள்.

ஜெயலலிதாவை விட அரசியல் கட்சி த
லைவர்களுடன் அதிக நட்பை வளர்த்து
வைத்து இருப்பவர் சசிகலா தான். அத னால் சசிகலாவினால் திமுக கூட்டணி
யில் உள்ள கட்சிகளை தன்னுடைய பக்கம் மிக சுலபமாக கொண்டு கொண்டு வந்து விடுவார்.

இது வரை திமுக ஜெயி்க்க முடியும் என்கிற நம்பிக்கையை அளித்ததே திமுகவின் பிஜேபி எதிர்ப்பு அரசியல் தான். அதற்கு
சசிகலா தலைமையிலான அதிமுக நிச்
சயமாக வேட்டு வைத்து விடும். இதனால்
பிஜேபி எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்கு முழுமையாக செல்லாமல் பிரிந்து விடு
கிறது. அதோடு அதிமுக ஆதரவு சிறுபான்மை
வாக்குகள் கடந்த லோக்சபா தேர்தலில்
திமுக கூட்டணிக்கு சென்றது மாதிரி அல்
லாமல் சசிகலா அதிமுகவுக்கு வந்து விடும் என்பதால் திமுகவின் வெற்றி வாய்ப்பு காலியாகி விடும்.

இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.சசிகலா ஒரு கூட்டணியை உருவாக்கும் அளவிற்கு தகுதியானவரா
என்று உங்களுக்கு கேள்வி வரலாம். சசி
கலாவிற்கு மக்கள் செல்வாக்கு இல்லை
என்றாலும் ஒரு கட்சியை வழி நடத்தவும்
கூட்டணிகளை உருவாக்கும் வல்லமையும் உள்ளவர் என்று அதிமுகவுடன் நேருங்கி இருந்த அரசியல் தலைவர்களுக்கு
தெரியும்.

சசிகலா தலைமையில் உண்டாகும் அதிமுக கூட்டணி தான் திமுகவை விட தீவிர பிஜேபி எதிர்ப்பு சக்தியாக உருமாறி நிற்கும் என்பதால் பிஜேபி எதிர்ப்பு சக்திகள் பிஜேபி எதிர்ப்பு வாக்குகள் சசிகலா அதி
முகவை நோக்கியே செல்லும்.

சசிகலா அதிமுகவினால் இரட்டை இலை சின்னத்துடன் உள்ள ஓபிஎஸ் அதிமுக வின் ஓட்டுக்களை 5 சதவீதத்திற்கு மேல் பெற முடியாது. ஆனால் திமுக ஆதரவு
ஓட்டுக்களை 10 சதவீதத்திற்கும் மேலாக
நிச்சயமாக பெற முடியும்.

அது மட்டுமல்லாது சசிகலா அதிமுகவி ல் தான் பெருமளவு அதிமுக கட்சி தலைவர் கள் இருப்பார்கள் என்பதால் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக ஒரு புதிய இயக்கம் மாதிரியான தோற்றத்துடன் ரஜினி பாமக பிஜேபி ஆதரவுடன் தேர்தலை சந்தித்து 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி
பெறும். 2021 சட்டமன்ற தேர்தல் திமுகவின் தேர்தல் அல்ல. அது ரஜினி விரும்புகிற அர
சியல் மாற்றத்திற்கான தேர்தல். அதன்
பிறகு தமிழகத்தில் பிஜேபி மிகப்பெரிய
சக்தியாக வளரும்.திமுக உடைந்து சிதறும்.

ஸோ வீ ஆர் வெயிட்டிங் பார் சசிகலா. ஏனெனில் அவர் தான் 2021 சட்டமன்ற தேர்தலின் கேம் சேஞ்சர் அனேகமாக செப்டம்பர் இறுதியில் சசிகலா கர்நாடக சிறை யில் இருந்து விடுதலையாகி தமிழகம் வரலாம். அதற்கு பிறகு தமிழக அரசியலி ன் மா ற்றத்தை பாருங்கள். இவ்வாறு அவர் தனத்தி யூகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

யூகங்கள் அனைத்தும் வெற்றியடையுமா இல்லை மாறுதல் காணுமா என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும், இதே 4 வருடங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்றோ ஆட்சியை முழுமையாக பூர்த்தி செய்வார் என்றோ யாராவது தெரிவித்து இருந்தால் 1% பேர் கூட நம்பியிருக்க மாட்டார்கள் ஆனால் இது நிலைதான் விஜயகுமார் அவர்களின் யூகத்திற்கும் முடிவு வரும் காலங்களில்தான் தெரியவரும்.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2703 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*