Connect with us

#24 Exclusive

இந்திய அணிக்கு வலுசேர்க்க மீண்டும் வரும் தமிழக வீரர் !

இந்திய அணியின் மிடில் ஆர்டர் அவ்வளவு பிரமாதமாக இல்லை அதனால் மிடில் ஆடரை பலப்படுத்த பலரையும் முயற்சி செய்து வருகிறது இந்திய அணி . அந்த வரிசையில் ராயுடு , பண்ட் , சிராஸ் ஐயர் , விஜய் ஷங்கர் , தினேஷ் கார்த்திக் என பலரும் உள்ளனர் .

இந்நிலையில் சில தொடர்களில் அந்த வாய்ப்பு தமிழக வீரர் விஜய் ஷங்கருக்கு வழங்கப்பட்டது . ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை . விஜய் ஷங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் இணைத்து தமிழக அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு தமிழக அணியை , விஜய் ஹசாரே கோப்பை தொடர் மற்றும் சையத் முஸ்டக் அலி தொடர் ஆகிய இருதொடர்களில் தமிழக அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார் .

ஆனால் இந்த இரு தொடர்களிலும் இறுதிப்போட்டியில் கர்நாடக அணியிடம் தோல்வியடைந்தது தமிழக அணி . இந்நிலையில் தமிழக ரஞ்சி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் விஜய் ஷங்கர் ஆனால் காயம் மற்றும் காய்ச்சல் காரணமாக அவரால் ரஞ்சி தொடரில் பங்கேற்க முடியவில்லை , இப்போது அவர் குணமாகி தனது உடல் தகுதியை நிரூபித்துவிட்டதால் தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச அணிகள் மோதும் அடுத்த போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளார் .

Loading...

இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள தமிழக அணி கர்நாடக அணி மற்றும் ஹிமாச்சல் அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது , மத்தியபிரதேச அணியுடன் ட்ரா செய்து ஒரு புள்ளியை பெற்றுள்ளது .
இதனால் இனி ஆடும் ஆட்டங்களில் தமிழக அணி வெற்றிபெறவேண்டும் .

Loading...

தமிழக அணிக்காக ஒருசில போட்டிகளை விளையாடியபின்பு அடுத்து இந்திய அணி ஆடும் ஆஸ்திரேலிய தொடர் அல்லது நியூசிலாந்து தொடரில் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது . பிசிசிஐ இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending