Connect with us

#24 Exclusive

தனது உயிரை துறந்து பலரின் உயிரை காப்பாற்றிய காவலர் வில்சன் . வெளியான அதிர்ச்சி தகவல் விரைகிறது NIA .

கடந்த புதன்கிழமை இரவு கன்னியாகுமரியில் தமிழக கேரள எல்லை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார் காவல் ஆய்வாளர் வில்சன் . அப்போது அந்த வழியாக வந்த இருவரை வில்சன் மடக்கி விசாரிக்க முயன்றபோது அவர்கள் காவல் ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பினர் .

இந்த சம்பவத்தை விசாரித்த காவல் துறையினருக்கு அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் காத்திருந்தது .சிறப்பு ஆய்வாளர் வில்சன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்களும் , பெங்களுருவில் கடந்த சில நாட்களுக்கு முன் சிக்கிய முஹமது ஹனீப் கான் , இம்ரான் கான் , சயீத் கான் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஒத்துப்போயினர் .

அந்த 3 தீவிரவாதிகளை விசாரித்ததில் அவர்கள் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததும் மொத்தம் 14 பேர் தென்னிந்தியாவில் இருந்து நேபாளம் சென்று அங்கு கத்மண்டுவில் தங்கி பயங்கர ஆயுதங்களை சேகரித்துவிட்டு அங்கிருந்து இந்தியாவிற்குள் நுழைந்து இந்தியாவின் மும்பை டெல்லி , பெங்களூரு சென்னை ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது

Loading...

அந்த கும்பலை சேர்ந்த இருவர் தான் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழைய முயன்றபோது வில்சன் தடுக்க முயன்றதால் அவர்கள் தப்பிக்க வில்சனை சுற்று கொன்றுள்ளனர் . இதனால் அந்த பயங்கரவாதிகளை பிடிக்க 10 தனிப்படைகள அமைக்கப்பட்டுள்ளது . இது தேசிய பாதுகாப்பு பிரச்சனை என்பதால் இந்த வழக்கை விசாரிக்க விரைகிறது தேசிய புலனாய்வு முகமை .

Loading...

ஒருவேளை வில்சன் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் . ஆனால் வில்சன் தனது இன்னுயிரை தியாகம் செய்து பயங்கரவாதிகளை அடையாளம் காட்டியுள்ளார் .

Loading...

Trending