Connect with us

#24 Exclusive

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பாண்டேவா ? பாண்டேவின் பதிலால் பரபரப்பு வீடியோ இணைப்பு

சமூகவலைத்தளம் :- தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தராஜன் கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யபட்டார் அன்றில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களாக தமிழக பாஜகவிற்கு தலைவர் நியமனம் செய்யப்படாமல் நிர்வாகிகள் கூடி முடிவுகளை எடுத்து கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.

இதற்கு இடையில் தான் இரண்டு தொகுதி இடைத்தேர்தல், அரசகுமார் திமுகவிற்கு சென்றது போன்ற நிகழ்வுகள் நடந்து முடிந்தன, இதற்கு இடையில் தமிழக பாஜகவிற்கு அடுத்த தலைவராக யாரெல்லாம் வருவார்கள் என்று பல நாட்களாக ஊடகங்களில் பல பெயர்கள் அடிபட்டு வந்தன அதில் H ராஜா, ஸ்ரீனிவாசன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், AP முருகானந்தம் ஆகியோர்களின் பெயரும் அவ்வப்போது அடிபட்டு வந்தது.

இந்த சூழலில்தான் முன்னணி பத்திரிகையாளர் பாண்டே தமிழக பாஜகவிற்கு தலைவராக வரவேண்டும் என ஒரு தரப்பு தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர், சிலர் நேரடியாக பாண்டேவிடம் அரசியலுக்கு வர போகிறீர்களா என்று கேட்டனர் அதற்கு பாண்டே மறுப்பு தெரிவித்தே வந்தார்.

Loading...

இந்த சூழலில்தான் பாண்டேவின் இணைய ஊடகமான சாணக்யாவில் வாசகர்களின் கேள்விக்கு பாண்டே பதில் அளித்து வந்தார் அதில் பாண்டே விடம், மோடி அரசின் செயல்பாடுகள், மகாராஷ்டிரா மாநில நிலவரம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த சுப்ரமணிய சாமியின் கருத்து குறித்த கேள்விக்கு பாண்டே பதில் அளித்தார். அத்துடன் ஒரு வாசகர் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பாண்டேவா? என்று கேள்வி எழுப்பினார்.

Loading...

அதற்கு சட்டென சிரித்த பாண்டே எத்தனை முறை உசுப்பேத்தினாலும் நான் மாறமாட்டேன் அது போன்ற எண்ணம் எனக்கு இல்லை பாஜக தலைமையும் அந்த விபரீத முடிவிற்கு வராது என்று குறிப்பிட்டிருந்தார் இங்கு தான் பாண்டே கருத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, பாண்டே இணைய ஊடகத்தில் திடீர் என இந்த கேள்வியை கேட்கவேண்டிய அவசியம் என்ன?

அதையே தலைப்பாக வைத்து பகிர தேவை என்ன என்ற பல கேள்விகள் இப்போது பாண்டேவை நோக்கி கேட்கப்பட்டு வருகின்றனர், தமிழக பாஜகவிற்கு டிசம்பர் மாதத்தில் தலைவர் நியமிக்கப்படலாம் என்று முன்பே மேலிட பொறுப்பாளர்கள் கூறிவந்த நிலையில் தற்போது பாண்டேவின் கருத்து பரபரப்பை உண்டாகியுள்ளது. பாண்டே வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது !

Loading...

Trending