பிரபல ஊடகத்தை வறுத்து எடுத்த பாஜக தலைவர் ! சொன்னது ஒன்று பரப்பியது ஒன்று !!

தமிழக ஊடகங்கள் நினைத்தால் என்ன செய்யமுடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் பாஜக மாநில தலைவர் முருகன் மீது பாஜக தொண்டர்களையே விமர்சனம் செய்யவைக்க முடியும் என செய்து காட்டியதுதான், யாரும் விமர்சனம் செய்யமுடியாதவர்கள் என்று அர்த்தமில்லை ஆனால் செய்தியை திரித்து காட்டி அதனை அவரது கட்சியினரே வெறுக்கும் அளவிற்கு கொண்டு சென்றதுதான் இங்கே ஆச்சர்யம்.

Loading...

பாஜக மாநில தலைவர் முருகன் கொரோனா பிரச்னையை மதம் ரீதியாக பார்க்க கூடாது என கூறியதாக பிரபல செய்தி நிறுவனங்கள் புதியதலைமுறை, news18 இன்னும் பிற செய்தி வெளியிட்டன, ஆனால் யாரை சொன்னார் என குறிப்பிட வழக்கம் போல் மறுத்து விட்டனர் என்றே சொல்லவேண்டும்.

முருகன் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :- தமிழகத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியாவில் கொரோனாவின் பரவலைத் தடுத்திட மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பாரதப் பிரதமர் அவர்கள் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து பேசிவருகிறார். தமிழக அரசுதுரித கதியில் இயங்கி வருகிறது.

Loading...

இந்தியாவுக்கும் கொரோனாவுக்கும் இடையே ஒரு பெரிய போர் நடந்து வருவதைப்போல நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கொரோனாவை வீழ்த்திட முதல் நடவடிக்கை அவரவர் வீடுகளில் தனித்திருத்தல் தான். இதை நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்கஇந்த நிலையில் தில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சென்றிருந்த சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தமிழகம் திரும்பி இருப்பதாக தெரியவருகிறது. மாநாட்டில் கலந்து கொண்ட பல வெளிநாட்டினரும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பாமல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்குச் சென்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

மாநாட்டின் போதும் பயணத்தின் போதும் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகளால் சம்பந்தப்பட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வேண்டும்.இதில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரால் சிலரை தொடர்பு கொள்ள முடிந்தது என்றும் சிலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல் வெளியானதால், தொடர்பு கொள்ள முடியாதவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் நேற்றைய தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசின் இந்த வேண்டுகோளை தொடர்ந்து தமிழக மக்களின் நலன் கருதி இந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்தம் குடும்பத்தினர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகளில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இதை யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், கொரோனாவுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மாநில அரசும் மக்கள் நலன் கருதி இவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், இதில் அரசியல் மத பிரச்சினைகளை யாரும் உட்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து இஸ்லாமிய அறிஞர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்து இருந்தார், கடைசி பாராவை மீண்டும் படித்தால் அவர் யாரை சொன்னார் என தெரியவரும் மோடி அரசு மதம் ரீதியாக பழிவாங்குவதாக பல இஸ்லாமியர்கள் குற்றம் சுமத்திய நிலையில் அவர்களை தான் இந்த விவகாரத்தில் மதம் ரீதியாக பார்க்கவேண்டாம் என கூறினார்.

ஆனால் எந்த ஊடகமும் முழுமையான தகவலை கொண்டு சேர்க்காமல் கடைசி வரியை தலைப்பாக வைத்து சொன்னது ஒன்றையும் பரப்பியது ஒன்றையும் தெளிவாக செய்துவிட்டன, விளக்கம் கொடுக்கப்பட்டும் தமிழக ஊடகங்கள் அதனை சொல்லவில்லை, இனியாவது ஒரு செய்தி தமிழக ஊடகங்களில் வந்தால் அதன் முழு விவரத்தையும் ஆராயாமல்..,

கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் குறிப்பாக புதியதலைமுறையில் ஒரு செய்திவந்தால் தீர விசாரணை செய்யவேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தியுள்ளனர். நேரில் வறுத்து எடுத்த சம்பவம் கொரோனா பாதிப்பு முடிந்ததும் தக்க நேரத்தில் வெளிவறுமாம்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*