Connect with us

சர்ச்சைகள்

செய்வது தவறு இதில் மன்னிப்பா வருத்தம் கூட தெரிவிக்க முடியாது ஓடுங்கள் விரட்டி அடித்த பாஜக, கதறும் திமுக !!

திமுக நிர்வாகி மதுரையில் கோவிலை கழிப்பறையாக மாற்றிய சம்பவம் தமிழகம் முழுவதுமுள்ள கோவிலுக்கு செல்பவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது இது குறித்து பல தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த சூழலில் தமிழக பாஜகவும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது.

இதுகுறித்து தனது அதிகார பூர்வ பக்கத்தில் :- தேன் எடுத்தவன் புறங்கையை ருசிப்பானாம்
இந்து விரோத கட்சிக்கு இந்து கோவில் இடங்களை அபகரிக்க இனிக்கிறதோ?
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் @ptrmadurai கீழ் நடந்த முறைகேட்டிற்கும் மன்னிப்பு கேட்பாரா ஸ்டாலின் PK யார் வித்தை எல்லாம் திமுகவிடம் பலிக்குமா என்ன? என பதிவு செய்திருந்தனர்.

கோவிலை கழிப்பறையாக மாற்றியது குறித்து கவலை கொள்ளாத திமுக எம் எல் ஏ பாஜக அவர் பெயரை குறிப்பிட்டதற்காக வழக்கு தொடர போவதாக மிரட்டல் விடுத்தார் இது குறித்து அவர் பதிவிட்டது பின்வருமாறு :- பொதுவாக இது போன்ற கேடுகெட்ட செயல்களின் மீது நான் கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில், @BJP4TamilNadu முன்வைக்கும் கேவலமான அவதூறுகளுக்கு எதிர்வினையாற்றும் அளவுக்கு நான் தரம் தாழ்வதில்லை.
ஆனால், எதற்கும் எல்லை உண்டு. பதிவை நீக்கி மன்னிப்பு கோராவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

Loading...

ஆனால் இதற்கு பாஜக தரப்பில் மன்னிப்பு அல்ல வருத்தம் கூட தெரிவிக்கமுடியாது என பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது, :- , @RSBharathiDMK பிச்சை போட்டு வைத்திருக்கிறோம் என்றாரே அந்த தைரியத்தில் வழக்கு தொடுக்க நினைக்கிறார் போல @ptrmadurai

Loading...

மன்னிப்புகேட்கமுடியாது
ஆனால் வருத்தம் தெரிவிக்கிறோம்- கடவுள் மறுப்பு இயக்கங்களை சார்ந்தவர்கள் அறங்காவலராவதை வேடிக்கை பார்த்ததற்காக “வருத்தம்” தெரிவிக்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து தாங்கள் பதிவு செய்த குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக சில தகவல்களையும் இணைத்து கேள்வி எழுப்பியுள்ளனர், 1998ல் கட்டிடத்தை வாடகைக்கு விடும் பொழுது யார் அறங்காவலர்?

2006 வரையும், அதன் பின்னும் யார் அந்த பதவிக்கு வந்து அழகு பார்த்தனர்?
பரம்பரையாக வகித்த பதவியை மறைத்து ஏவல்கூட்டம் மூலம் அறைகூவல் விடும் யோக்கிய சிகாமணிகள்இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் மன்னிப்பு அல்ல வருத்தம் கூட இல்லை என அதிரடியாக தெரிவித்துள்ளனர்.

பாஜக ஐ டி விங் கொடுத்த பதிலடியால் என்ன செய்வது என்று தெரியாமல் திமுக எம் எல் ஏ PTR முழித்து கொண்டு உள்ளாராம். வழக்கமான மிரட்டலுக்கு எல்லாம் பாஜக பயன்படாது என தெரிவித்து இருப்பதும் அதற்கான ஆதாரத்தை குறிப்பிட்டு பதிலடி கொடுத்து இருப்பதும் திமுகவினர் இடையே உதறலை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...

Trending