Connect with us

#24 Exclusive

டைட்டானியம் ஆசியாவிலேயே முதல்முறை தமிழகத்தில்தான் அதிரடியாக சாதனை படைப்பு !

Published

on

டைட்டானியம் ஆசியாவிலேயே முதல்முறை தமிழகத்தில்தான் அதிரடியாக சாதனை படைப்பு !

சென்னை.,

ஆசியாவிலேயே முதன்முறையாக 5 வயது சிறுவனுக்கு டைட்டானியம் டென்டல் இம்ப்ளான்ட் செய்து ராஜன் டெண்டல் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர விடுதியில் இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மருத்துவமனை இயக்குனர் டாக்டர். குணசீலன் ராஜன், ராஜஸ்தானை சேர்ந்த 5 வயது சிறுவன் சமசுக்‍கு, இ.டி எனப்படும் எக்டோடெர்மல் டிஸ்ப்ளஷ்யா எனும் பாதிப்பு இருந்ததாகவும், அதன் காரணமாக சிறுவனுக்கு கீழ்த்தாடையில் பற்கள் இல்லாமலும், மேல் தாடையில் இரண்டே பற்கள் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் சிறுவனுக்கு கழற்றி மாட்டக்கூடிய பல்செட் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் கீழ்தாடை வெறுமையாக இருந்ததால் பல்செட்டை பொருத்தி பயன்படுத்த முடியவில்லை – அதனால் போதுமான உணவு சாப்பிட முடியாமல் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

உலக அளவில் இந்த பிரச்சினைக்கு டைட்டானியம் டென்டல் இம்ப்ளான்ட் பொருத்துவது மட்டும்தான் ஒரே தீர்வாக கருதப்படுகிறது என்றும், இந்த அதிநவீன தொழில்நுட்ப சிகிச்சையை சமசுக்‍கு வெற்றிகரமாகநிறைவேற்றப்பட்டுள்ளதாகம தெரிவித்தார்.

ஆசியாவில் முதன்முறையாக மிகக்குறைந்த வயதில் இம்ப்ளான்ட் சிகிச்சையை சிறுவன் சமஸ் பெற்றுள்ளான். உலக அளவில் பத்துக்கும் குறைவானவர்களே ஐந்து வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் இந்த சிகிச்சையை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்‍கது.

மருத்துவத்துறையில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து மருத்துவத்துறையில் சாதனை படைத்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share