ஏழுமலையானதான் பார்க்க முடியவில்லை… லட்டாவது சாப்பிடுங்கள் – தேவஸ்தானம் அதிரடி!

ஏழுமலையானதான் பார்க்க முடியவில்லை… லட்டாவது சாப்பிடுங்கள் – தேவஸ்தானம் அதிரடி!

Loading...

திருப்பதி தேவஸ்தானம் லட்டு விலையை குறைத்து விற்பனையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக வருவாய் உள்ள கோயிலாக திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. கொரோனா பரவல் இந்தியாவில் அதிகமான நிலையில் கோயில் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் கோடிகளை திருப்பதி தேவஸ்தானம் இழந்துள்ளது. இதனால் 4000 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது என அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

இந்நிலையில் எப்போது ஊரடங்கு முடிந்து மீண்டும் கோயில் திறக்கப்படும் எனத் தெரியாத நிலையில் திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘அதில் ஏழுமலையான்  தரிசனம் கிடைக்காத நிலையில், ஏழுமலையானின் பிரசாதத்தையாவது அளிக்க வேண்டும் என பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதையடுத்து 50 ரூபாய் விலையுள்ள லட்டு மானிய விலையில் 25 ரூபாய்க்கு விற்கப்படும். ஊரடங்கு முடியும் வரை இந்த விலைக் குறைப்பு அமலில் இருக்கும். இது ஆந்திராவில் மட்டுமல்லாமல் சென்னை உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களிலும் கிடைக்கும்.

முன்பு மோல் அளவு இல்லாமல் எத்தனை லட்டுகளை வேண்டுமானாலும் ஒருவர் வாங்கிக் கொள்ளலாம். இன்னும் ஓரிரு தினங்களில் லட்டு விற்பனைத் தொடங்கும். மேலும் ஊழியர்களுக்கு மார்ச் ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. மே மாதத்துக்கான ஊதியமும் தயாராக உள்ளது. ஏழுமலையான் என்னைக்கும் எங்களை ஏழையாக விடவில்லை.’ என அறிவித்துள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*