ஆழ்துளைக் கிணற்றுக்குள் மீண்டும் ஒரு சிறுவன் – இரண்டாவது நாளாக போராட்டம்!

ஆழ்துளைக் கிணற்றுக்குள் மீண்டும் ஒரு சிறுவன் – இரண்டாவது நாளாக போராட்டம்!

Loading...

ஹைதராபாத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 3 வயது சிறுவன் ஒருவனைக் காப்பாற்றும் போராட்டம் இரண்டாவது நாளாக நடந்து கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து குழந்தைகள் பலியாவதும் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்படுவதும் நீண்ட வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ஆழ்துளைக் கிணறூகளை சரியாக மூடாமல் விடும் அலட்சியப் போக்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

Loading...

சமீபத்தில் தமிழகத்தின் திருச்சியில் 3 வயது சிறுவன் சுர்ஜித் இதுபோல கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு குழந்தை இது போல ஹைதராபாத்தில் ஒரு சிறுவன் விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில் வசித்து வந்த கோவர்தன் என்பவரின் 3 வயது மகன் ஷாய் வர்தன்.அந்த சிறுவன் தந்தையுடன் தங்கள் விவசாய நிலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, தவறுதலாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான். 

இதையடுத்து அவனை மீட்கும் பணிகள் தொடங்கிய நிலையில் முதலில் 25 அடியில் இருந்த அந்த சிறுவன் பின்னர் மண் சரிவு காரணமாக மேலும் கீழே சறுக்கியுள்ளான். இதையடுத்து சிறுவனுக்காக ஆக்ஸிஜன் உள்ளே அனுப்பப்பட்டு வருகிறது. ஐதராபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளது. கிணற்றுக்கு இணையாக பள்ளம் தோண்டி அதன் மூலம் குழந்தையை மீட்கும் பணிகள் நடக்க இருக்கின்றன. நேற்று முழுவதும் நடந்த போராட்டத்தை அடுத்து 2வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடரவுள்ளன.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*