மதுரையில் இன்று நடக்க இருந்த மூன்று திருமணங்கள் – மோடியின் உத்தரவால் ?

மதுரையில் இன்று நடக்க இருந்த மூன்று திருமணங்கள் – மோடியின் உத்தரவால் ?

Loading...

மதுரையில் இன்று நடக்க இருந்த மூன்று திருமணங்கள் மோடியின் உத்தரவை ஏற்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது மனிதர்கள் வாழும் 6 கண்டங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 13000 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். கிட்டதட்ட இரண்டு லட்சத்துக்கும் மேலானவர்கள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த நோய் தாக்குதல் கண்டறியப்பட்டு மூன்றாவது வாரம் ஆகியுள்ளது. இந்தியாவில் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக இன்று மோடி மக்களை சுய ஊரடங்கு செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்குமாறு கூறியுள்ளார்.

Loading...

இந்நிலையில் இன்று மதுரையில் நடக்க இருந்த மூன்று திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதே போல அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களில் இன்று நடக்க இருந்த திருமணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*