தொடர்மழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது

Loading...

கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிரம்பி வழிவதால் வரும் ஆண்டு குடிதண்ணீருக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன

இந்த நிலையில் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது என்பதே. அந்த வகையில் இன்றும் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Loading...

இன்று ராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்

மேலும் இன்னும் ஒரு சில மாநில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் அம்மாவட்டங்களில் இன்று விடுமுறையா? என்பது குறித்த செய்திகள் ஒருசில நிமிடங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*