Connect with us

#24 Exclusive

நினைத்ததை சாதித்தது தமிழக காங்கிரஸ் !

Published

on

சென்னை :- திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி குற்றம் சுமத்தினார், தொடர்ந்து திமுகவினர் காங்கிரஸ் கட்சியை புறக்கணிப்பதையும், கேட்ட இடங்களை ஒதுக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பா சிதம்பரத்திடம் முறையிட அவரது தீவிர ஆதரவாளர் கே எஸ் அழகிரி மூலம் தனது குரலை சிதம்பரம் எதிரொலித்ததாக கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் திமுக முக்கியத்துவம் தராத நிலையில் நிச்சயம் சட்டசபை தேர்தலில் முக்கியத்துவம் தர வாய்ப்பில்லை என்றும் இனியும் அமைதியாக இருந்தால் சட்ட சபை தேர்தலில் 50 க்கும் குறைவான இடங்களை ஒதுக்கி விடுவார்கள் என திட்டமிட்ட காங்கிரஸ் தாங்கள் யார் என்பதை நிரூபிக்கவே திமுக தலைமையை ஆட்டம்காண வைக்க உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக திமுக முக்கிய தலைவர்கள் துரைமுருகன், டி ஆர் பாலு ஆகியோர் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்ய பதிலுக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கார்த்தி சிதம்பரம், மாணிக் தாகூர், இன்னும் பிற தலைவர்கள் பதிலடி கொடுத்தனர், அதனை தொடர்ந்து திமுக இல்லை என்றால் ரஜினி தலைமையில் செல்வோம் என்றும் ரஜினியும், சிதம்பரமும் நெருக்கமானவர்கள் என்று அரசல் புரசலாக பேச்சுக்கள் திட்டமிட்டே பரப்ப பட்டுள்ளன.

Loading...

இந்த சூழலில்தான் திமுக தலைமை திமுக தலைவர்களை அடக்கி வாசிக்க சொல்லியும், அதே நேரத்தில் கே எஸ் அழகிரி சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது, முதலில் அழகிரியை சந்திக்க விரும்பாத பெரியண்ணன் மனப்பான்மையில் இருந்த ஸ்டாலின் இறங்கிவந்துள்ளதை வைத்தே திமுகவிற்கு காங்கிரஸ் கூட்டணி எவ்வளவு முக்கியம் என்பதனை அறியலாம்.

Loading...

அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சிறிய கட்சிகள் கூட திமுகவிற்கு, இரு கட்சிகளும் சமரசமாக செல்வது நலம் என்று அறிவுரை வழங்கியுள்ளது, திமுகவினரை சற்றே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது, இந்நிலையில்தான் கே எஸ் அழகிரி ஸ்டாலின் சந்திப்பில் நேரடியாக மாநகராட்சி இடங்கள் குறித்தும் அடுத்த சட்டசபை தேர்தல் கூட்டணி இடங்கள் குறித்தும் பேசி தீர்மானம் செய்யவும் காங்கிரஸ் முடிவெடுத்து விட்டதாகவும், தமிழகத்தில் இழப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை ஆனால் திமுகவிற்கு அடுத்த சட்டசபை தேர்தல் முக்கியம் என சொல்லிவந்தது காங்கிரஸ்.

அதை தற்போது செயலிலும் சாதித்து காட்டியதாக அரசியல் விமர்சகர்கள் திமுக காதுபடவே விமர்சனம் செய்து வருகின்றனர், ஓட்டே இல்லை என்ற காங்கிரஸ் கட்சியிடம் பணிந்ததா திமுக?

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending