இனிமே எல்லாம் தூத்துக்குடியில தான் ! இஸ்ரோ அதிரடி அறிவிப்பு !

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) தனது இரண்டாவது ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2,300 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Loading...

நமது நாட்டிற்கான விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று இன்கோஸ்பாரை (INCOSPAR) மருவி உருவாக்கப்பட்டது. இதில் போலார் எனப்படும் துருவங்களுக்கு ஏவப்படும் PSLV – Polar Satellite Launch Vehicle, ஜியோசின்குரோனஸ் எனப்படும் GSLV – Geosynchronous Satellite Launch Vehicle, மற்றும் சிறிய ராக்கெட் ஏவுதளமான SSLV – Small Satellite Launch Vehicle என ஏவுதளங்கள் இருக்கின்றன. இதில் ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ஏவுதளங்கள் அமைந்துள்ளது. அதில் ஒன்றான GSLV ஏவுதளம் தற்போது பராமரிப்பு பணியில் உள்ளது. இதற்கு காரணம் விரைவில் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் உள்ளது.

ககன்யான் திட்டம் போன்ற கனவு திட்டத்திற்காக பராமரிப்பில் இருக்கும் ஏவுதளத்தால் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. இந்த கால விரையங்களை தவிர்க்க புதிய ஏவுகணை தளம் அமைக்க முடிவு செய்தது இஸ்ரோ. சில ஆண்டுகள் முன்பு வரை இந்த இரண்டாவது ஏவுகணை தளத்தை குஜராத் மாநிலத்தில் அமைக்க திட்டமிட்டிருந்தனர். அது கைவிடப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது 1990களிலேயே பரிந்துரைக்கப்பட்ட இடமாம். இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளத்தை தூத்துக்குடியில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க பல்வேறு காரணங்களை கூறுகின்றனர் இஸ்ரோ அதிகாரிகள்.

Loading...

அதாவது நமது நாட்டின் ராக்கெட்கள் ஏவபட்டு நமது வான் எல்லைகளில் பறப்பதே சிறந்தது. அதற்காக தான் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளத்தை அமைத்துள்ளனர். அங்கிருந்து ராக்கெட்கள் ஏவபட்டால் இலங்கைக்கு கிழக்கே பறந்து அந்நாட்டின் வான்வெளியை பயன்படுத்தாமல் அடைய வேண்டிய இடத்தை அடையும். இப்போது குலசேகரப்பட்டினத்தில் அமைக்கபடுவதன் மூலம் லக்ஷதீவுகள் வழியாக விண்ணில் பாயும். அதுமட்டுமில்லாமல் குலசேகரப்பட்டினத்திற்கு அருகே 100 கி.மீ தொலைவில் மகேந்திரகிரியில் தான் ராக்கெட் ஏவ 2,4 ஆம் கட்டங்களில் பயன்படும் திரவ எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இது இந்த இடத்தை தேர்ந்தெடுக்க மேலும் காரணியாக இருந்துள்ளது. மேலும் பூமியின் தென் பகுதி, EQUATOR பகுதிகளில் ராக்கெட்டை நிலைநிறுத்த இங்கிருந்து ஏவுவதுதான் உகந்ததாக இருக்குமாம்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம் சிறிய வகை ராக்கெட்களை ஏவ பயன்படுத்தப்பட்டாலும் இது இஸ்ரோவின் நேர விரயத்தை பெருமளவு குறைக்கும். இது அமைக்கபடுவதன் மூலம் இப்போது ஏவப்படும் ராக்கெட்களை விட 2-3 மடங்கு ராக்கெட்கள் ஏவபடலாம். இதற்காக நமது நாட்டை சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்படவுள்ளது.

இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்பட்டு இஸ்ரோ பல்வேறு சாதனைகளை குறுகிய காலகட்டத்தில் நிகழ்த்த முடியும். நாமும் இத்திட்டம் வெற்றி பெற்று நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் என்று எதிர்பார்த்திருப்போம்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*