Connect with us

அரசியல்

இந்த இரண்டில் ஒரு தொகுதியில்தான் ரஜினி களம் இறங்குகிறார் ! ரசிகர் மன்றத்தினர் முற்றுகையால் திக்கு முக்காடும் மக்கள் !

Published

on

சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பேட்டி அளித்ததை தொடர்ந்து தமிழ்ப்புத்தாண்டான சித்திரை ஒன்று அன்று ரஜினி கட்சி தொடங்குவார் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் ரஜினி பொது கூட்டத்தை நடத்துவார் என்ற செய்திகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கின மேலும் பாமக உடன் ரஜினி கூட்டணி வைப்பார் எனவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கின.

இந்நிலையில் தமிழருவி மணியன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தான் சொல்லாத கருத்துக்களை ஊடகங்கள் பரப்புவதாகவும், இனி ரஜினி கட்சி தொடங்கும் வரை எந்த ஊடகத்திற்கும் பேட்டியோ நேர்காணலோ கொடுக்க போவதில்லை என்றும் ரஜினி தொடங்கும் கட்சி பெயர் மாநாடு குறித்து அவர்தான் அறிவிப்பார் அந்த அறிவு கூட இல்லாதவனா நான் என வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினி வருகிற சித்திரை 1 தமிழ் புத்தாண்டு அன்று கட்சி தொண்டங்குவார் எனவும், அவர் நடத்திய சர்வே முடிவுகள் படி, சென்னை தி. நகர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகிய வேப்பன ஹள்ளி ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது, இந்த இரண்டு தொகுதிகளில் உள்ள குறைகளை நேரடியாக ரஜினி மக்கள் மன்றத்தினர் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றி வருகின்றனர்.

Loading...

கடந்த கோடை காலத்தில் சென்னையில் தண்ணிர் தட்டுப்பாடு ஏற்பட்டதில் இருந்து இப்போதுவரை தி நகர் மற்றும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் அளித்து வருவதாகவும், இன்னும் பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது, மேலும் சர்வே முடிவுகளின் அடிப்படையில் ரஜினிக்கு நிச்சயம் தி நகர் தொகுதி கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. இங்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்திய நாராயணன் எம் எல் ஏ வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயல்பாக ரஜினி ரசிகர்கள் அதிகம், கடந்த 1991 தேர்தலில் ரஜினி திமுகவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக மிக பெரிய வெற்றியை பெற்றது, வெளிப்படையாக ரஜினி ரசிகர்கள் ஆதரவுதான் வெற்றிக்கு காரணம் என கூறப்பட்டது, இந்த கணக்கினை கொண்டும் ரஜினி வேப்பன ஹள்ளியில் போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

எது எப்படியோ சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில் அடுத்து பல அதிரடி அரசியல் நகர்வுகள் அரங்கேறும் என எதிர்பார்க்கலாம்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending