Connect with us

#24 Exclusive

இதற்குத்தானே குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறீர்கள், ஓடி ஒழியும் ஷாநவாஸ் !! வீடியோ இணைப்பு

திமுக + சார்பில் மிக பெரிய அளவில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டன ஊர்வலம் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது, இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக வரும் இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை மறுக்க பட்டது தவறு என்றும் இந்தியர்களுக்காக அரசியல் நடத்தும் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இந்தியர் ஒருவர் சைவ ஓட்டல் நடத்தியதற்காக இந்தியாவில் இருந்து சென்ற இஸ்லாமியர்களால் மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, பக்ரைன் இஸ்லாமிய நாடு என்றும் இந்துவான ஒருவர் கடை வைத்திருப்பது தவறு என்றும் கேரளாவில் இருந்து பக்ரைன் சென்ற இஸ்லாமியர்கள் மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து இந்தியாவில் வெளிநாட்டு இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்கவேண்டும் என்று போராடும் ஸ்டாலின், இன்னும் பிற அரசியல் கட்சி தலைவர்களை கிழித்து வருகின்றனர், எங்கோ உள்ள இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை சட்டம் வழங்க வேண்டும் என போராடும் யாரும் ஏன் காஷ்மீரில் அடித்து விரட்ட பட்ட இந்துக்களுக்கு போராடவில்லை என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

Loading...

இந்தியன் இந்துவான ஒருவன் இஸ்லாமிய நாட்டில் அடிமையாக வாழவேண்டும் என்றால், தொழில் நடத்த கூடாது என்றால் எங்கிருந்தோ இந்தியாவிற்குள் அடைக்கலம் தேடிவந்த அகதிகளுக்கு இந்தியா குடியுரிமை கொடுத்து அழகுபார்க்க வேண்டுமா என்றும் நாளை இந்தியர்களை இந்தியாவை விட்டு விரட்டுவதை ஊக்கு விக்க இந்த கட்சிகள் செயல்படுகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Loading...

இந்த வீடியோவை எப்போதும் சமூகவலைத்தளத்தில் கருத்துக்களை பகிர்ந்துவரும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஷாநவாஸை பலரும் சமூகவலைத்தளங்கள் மூலம் தொடர்புகொண்டு கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அவர் இதுகுறித்து எந்த பதிலும் கூறாமல் ஒளிந்துகொண்டுள்ளார், இந்த விடீயோவை பலரும் பகிர்ந்து இதுதான் வெளிநாட்டில் ஒரு இந்துவான இந்தியனின் நிலைமை ஆனால் இங்கோ எங்கோ பாகிஸ்தான், வங்கதேசம், ஆபிகானிஸ்தானை சேர்ந்த முஸ்லீம் அகதிகளுக்கு குடியுரிமை வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

சமூகவலைத்தளங்களில் பரவும் வீடியோ எப்போது எடுத்தது என தெரியாத நிலையில் அதில் உள்ள கருத்துக்கள் தற்போது எடுத்துக்காட்டாக வலம்வருகின்றன. இதற்கு எதிர் கட்சிகள் குறிப்பாக தமிழகத்தில் இந்து பண்டிகைக்கு கூட வாழ்த்து சொல்லாமல் வெளிநாட்டு அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதை கண்டித்து போராடும் திமுக மற்றும் அதன் கூட்டணி இயக்கங்கள் பதில் சொல்வார்களா என்ற கேள்வியும் எழுப்ப படுகிறது.. இதுதான் பெரும்பான்மையான இந்தியரான இந்துக்களின் நிலைமை இப்படி இருக்க திமுக போன்ற இயக்கங்களோ வெளிநாட்டவருக்காக போராடி வருகிறது.

Loading...

Trending