Connect with us

#24 Exclusive

தீர்ப்பு சொன்ன நீதிமன்றம் இதற்குத்தான் காத்திருந்தோம் அதிரடி உத்தரவிட்ட எடியூரப்பா ! கதறும் இஸ்லாமிய அமைப்புகள் .

தீர்ப்பு சொன்ன நீதிமன்றம் இதற்குத்தான் காத்திருந்தோம் அதிரடி உத்தரவிட்ட எடியூரப்பா ! கதறும் இஸ்லாமிய அமைப்புகள் .

கர்நாடக பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் முழுவதும் நீக்கப்படும் என்றும் திப்பு ஜெயந்தி ரத்து செய்யப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக இன்று அறிவித்து உள்ளார்.

திப்பு சுல்தான் கர்நாடக மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்ட மன்னன் . அவனது பிறந்தநாளை அரசு விழாவாக சித்தராமையா தலைமையிலான கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து சில ஆண்டுகள் திப்புசுல்தான் பிறந்த நாளான நவம்பர் 10ம் தேதி, அரசு விழாவாக கர்நாடகத்தில் கொண்டாடப்பட்டது.

Loading...

இதற்கு இந்தியா முழுவதும் உள்ள பாஜகவினர் அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . இது தொடர்பான வழக்கு , கர்நாடக உயர்நீதி மன்றதில் நடந்து வந்தது வழக்கினை விசாரித்த நீதிமன்றம் , திப்பு சுல்தான் ஒரு சுதந்திர போராட்ட வீரரல்ல, அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்ட மன்னன் மட்டுமே! எனவே அரசுவிழா கொண்டாட வேண்டிய தேவையில்லை என்று அதிரடியாக தெரிவித்தது.

Loading...

இதையடுத்து, பா.ஜ.க எம்.எல்.ஏ வான அப்பாச்சுரஞ்சன் என்பவர் திப்பு சுல்தானை சுதந்திர போராட்ட வீரரை போல சித்தரித்து பாடப்புத்தகங்களில் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் உடனடியாக இதனை நீக்கவேண்டும் என்றும், திப்பு பாரசீக மொழியையே அவர் தமது ஆட்சி மொழியாக பயன்படுத்தியதாகவும் அவரை கர்நாடக மக்கள் வரிப்பணத்தில் பொய்யை பரப்புவது கூடாது என்றும் திப்பு தனது ஆட்சிக்காலத்தில் முப்பது ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை மதம் மாற்றியதாகவும் குறிப்பிட்டு மாநில கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பாடநூல் நிறுவனத்திற்கு கல்வி அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா திப்பு பற்றிய அனைத்து தகவல்களும், பாடப்புத்தகத்தில் இருந்து முழுவதும் நீக்கப்படும் என்றும், அவருக்கு அரசுவிழா உள்ளிட்ட எந்த விழாவும் கொண்டாட முடியாது எனவும் அறிவித்துள்ளார். இதனால் திப்பு சாப்டர் இன்றோடு கர்நாடகத்தில் முடிவடைந்ததாக அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

©TNNEWS24

Loading...

Trending