Connect with us

#24 Exclusive

இந்தியா முழுக்க இப்போ இந்த வீடியோதான் ட்ரெண்டு யாரு பார்த்த வேலையா இது?

சமூகவலைத்தளம் :- ஒவ்வொரு நாளும் சமூகவலைத்தளங்களில் என்னென்ன விஷயங்கள் ட்ரெண்ட் ஆகிக்கொண்டுள்ளது என்று பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்றும் வழக்கம்போல #மூலபத்திரம் #மிசா சட்டங்கள் குறித்து அனைவரும் சீரியசாக பேசி வருகின்றனர், திமுகவினரும் இதில் எப்படியாவது ஆதாரத்தை நிரூபித்துவிடலாம் என ஒவ்வொன்றாக சொல்ல அதிலும் ஏதாவது பிழையாக முடிந்து விடுகிறது.

இந்நிலையில் மோடியின் ரசிகர் யாரோ ஒருவர் கோழி கூவுது என்ற பெயரில் சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படத்தின் ட்ரைலரில் மோடி, ராகுல், தமிழிசை, முக அழகிரி, கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களை வைத்து அப்படியே மாற்றி கனகச்சிதமாக மிகவும் நேர்த்தியாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது தமிழகத்தை தாண்டி இந்திய அளவில் மிகவும் பிரபலமாக ட்ரெண்ட் ஆகிவருகிறது, இந்த வீடியோவில் வரும் காட்சிகள் அனைத்தும் தத்துரூபமாக அப்படியே பொருந்தி இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Loading...

இதில் மிக பெரிய காமெடி என்னவென்றால் தமிழச்சி தங்கபாண்டியன் மிகவும் சீரியசாக நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் பேசியதை வெறும் குட்மோர்னிங் கோச் என்று ஒத்த வார்த்தையில் முடித்துவிட்டார் கிரேட்டர். நல்லா இருக்கு பாஸ் உங்க எடிட்டிங்.

Loading...

©TNNEWS24

Loading...

Trending