இந்த ஒரு ஆதாரம்தான் அயோத்தி தீர்ப்பையே மாற்றியதாம் !

டெல்லி :- அயோத்தி நிலம் தொடர்பான சர்ச்சைக்குரிய அனைத்து வழக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது, உச்சநீதிமன்றம், அயோத்தியில் இராமர் கோவில் கட்டலாம் என்றும், இஸ்லாமிய அமைப்பிற்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கவேண்டும் என்று அதிரடியாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Loading...

இதனை தொடர்ந்து பல பத்து ஆண்டுகளாக நடைபெற்றுவந்த அயோத்தி வழக்கில் முடிவு கிடைத்துள்ளது, இந்த நேரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அயோத்தி தீர்ப்பு குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார், அதில் தான் வி எச் பி மூத்த தலைவர் அசோக் ஜிங்கால் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு காரணமாக கூறப்படுவது.,

அயோத்தி நிலவிவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டபோது அசோக் ஜிங்கால் உடனடியாக துரிதமாக செயல்பட்டு பாபர்மசூதி இருந்த இடத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்யவேண்டும் என்றும், அப்படி செய்யும்பட்சத்தில் கோவில் இருந்தது வெளிச்சத்திற்கு வரும் என்று கூறினாராம். அதனை இந்து அமைப்புகள் வலியுறுத்த தொல்லியல் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Loading...

தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பும் தொல்லியல் துறையின் அறிக்கையை சுட்டிக்காட்டித்தான் வழங்கப்பட்டுள்ளது, அதாவது, பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பே இங்கு கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தொல்லியல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டித்தான் தீர்ப்பும் ராமர் கோவில் கட்டுவதற்கு சாதகமாக வந்துள்ளது.

இதனை வலியுறுத்திய சுப்ரமணியசாமி உடனடியாக வரலாற்று வெற்றிக்கு காரணமான அசோக் ஜிங்காலிற்கு மோடி அரசாங்கம் பாரத ரத்னா வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தொல்லியல்துறை அறிக்கை மட்டும் இல்லை என்றால் தீர்ப்பு மாறியிருக்க வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த 7 வருடங்களாக தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கிற்காக சுப்ரமணிய சாமி பணமின்றி வாதாடியதாகவும், அவர் இல்லை என்றால் இந்த வெற்றியே சாத்தியம் இல்லை என்று வழக்கில் சம்பந்தப்பட்ட விராட் ஹிந்துஸ்தான் சங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2668 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*