அரசியல்வாதிகள் கையில் சிக்கி சின்னாபின்னமாகும் திருவள்ளுவர்!

Loading...

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகப் பொதுமறையாக அனைத்து சமயங்களையும் மதங்களையும் பின்பற்றுபவர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் மட்டும் அவரை தங்களுக்கு என்ன சொந்தம் கொண்டாடி வருவது பெரும் நகைச்சுவையாகயும் வருத்தத்திற்கு உரியதாகவும் உள்ளது

திருவள்ளுவரை தமிழர் என்று பார்ப்பதாக திமுகவினரும், திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என பாஜகவினரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு அறிக்கைகள் மூலமும் டுவிட்டுக்கள் மூலமும் மோதிக்கொள்வது திருவள்ளுவரை அவமதிப்பதாக தெரிகிறது

Loading...


திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி திருநீறு பூசியதை கண்டித்து உள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தனது டுவிட்டர் தளத்தில்
’யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

இந்த எளிய குறளை தப்பும் தவறுமின்றி இரண்டு முறை சரியாக பொருளுடன் உச்சரித்தால், அந்த பதிவை நீக்கி விடுகிறோம் என்று கூறி உள்ளது. இந்த இரு அரசியல் கட்சிகளும் செய்யும் திருவள்ளுவர் அரசியலை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்

திருவள்ளுவரை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம் என்று நெட்டிசன்கள் பொதுமக்களும் இருதரப்பினர்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளனர். திருவள்ளுவரின் உண்மையான உருவம் எது? அவர் காவி உடை அணிந்திருந்தாரா? அல்லது வெள்ளை உடை அணிந்தாரா? என்பது யாருக்கும் தெரியாது. இதற்கான சான்று எதுவும் இல்லை. மேலும் அவருடைய 1330 குறளில் எந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு மதத்தையும், இனத்தையும் சேர்ந்ததாக இல்லை. எனவே இந்த இரு தரப்பினரும் இது விஷயமாக அடித்துக்கொள்வது தேவையில்லாத விஷயமாக கருதப்படுகிறது

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*