Connect with us

#24 Exclusive

சீமான் வீட்டில் களம் இறங்கியது காவல்துறை அடுத்து திருமுருகன் காந்தி நிலைமைதானா?

Published

on

சீமான் வீட்டில் போலீஸ் குவிப்பு அடுத்தகட்ட நடவடிக்கை திருமுருகன் காந்தி சொன்னதுதானா?

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தமிழகத்தில் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் வைத்து தற்கொலைப்படை தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார் ராஜிவ் காந்தியுடன் சேர்ந்து 20- கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்தனர்.அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்திலும், இலங்கையிலும் நடந்தன.

இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் என்று முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 நபர்களை மத்திய உள்துறை கைது செய்து தற்போது வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள்தான் (நாங்கள்தான் ) ராஜிவ் காந்தியை கொன்றோம் என்று பொதுக்கூட்ட மேடையில் பேசியது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Loading...

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து சீமானை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தன்னுடைய வீட்டில் இல்லாமல் வெளியூருக்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே அவரை உடனடியாக கைது செய்யவேண்டிய கட்டாயத்தில் காவல்துறை இருப்பதால் இன்று இரவிற்குள் முக்கிய சம்பவங்கள் அரங்கேறும் என்று ஊடகங்கள் தலைப்பு செய்தியாக கூறிவருகின்றன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் சீமான் வீட்டில் குவிந்து வருவதால் சீமான் கைது செய்வது உறுதி என்றும் திருமுருகன் காந்தி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது போன்று சீமானும் உள்ளே வைக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது. தற்போது சீமான் வீட்டை சுற்றி 20- க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆய்வாளர் தலைமையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com