Connect with us

#24 Exclusive

பொதுமக்கள் முன்னிலையில் அடித்து ஓடவிட்ட காவல்துறை கதறும் திருமுருகன் காந்தி &etc வைரலாகும் வீடியோ !!

மேட்டுப்பாளையம் :- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்உள்ள ஏடி காலனியில்
இருக்கும் 4 வீடுகள் சுற்று சுவர் இடிந்து விழுந்ததன் காரணமாக அதிகாலை 3.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அப்போதுவீடுகளில் உறங்கிக்
கொண்டிருந்தவர்களில் 17 பேர்
இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே
உயிரிழந்தனர்.

இதனையடுத்து உள்ளே வந்த தீயணைப்பு வீரர்கள் சிக்கியவர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், 20 அடி உயரத்திற்கு சுற்று சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் மற்றும் காண்ட்ராக்டர் ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர். இந்நிலையில் நிவாரண உதவியை உயர்த்தித்தரகோரி சிலர் அங்கிருந்த மக்களை தூண்டிவிட்டதாகவும், அவர்கள் ஒரு கட்டத்தில் தனி நாடு, இந்தியாவை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட திருவள்ளுவன்

ஒரு கட்டத்தில் பேசி பார்த்த காவல்துறை தமிழ் புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியின் தலைவன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட திருவள்ளுவன் என்பவர் தொடர்ந்து சர்ச்சிக்குரிய வகையில் பேச அவரை அடித்து பொதுமக்கள் முன்னிலையிலேயே வாகனத்தில் ஏற்றியது காவல்துறை, இந்த நாகை திருவள்ளுவன் என்பவர்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர்.,

Loading...

சென்னையில் நடைபெற்ற அயோத்தி தீர்ப்பு வழக்கில் ராமன் தடவி கொடுத்ததால் அணிலுக்கு மூன்று கோடுகள் வந்தது உண்மை என்றால் என்று கூறி சீதையுடன் ஒப்பிட்டு மிகவும் கொச்சையாக பேசியவர், திருமுருகன் காந்தியின் மிக நெருங்கிய நண்பர். புதிதாக போராளி வேசம் எடுத்த திருவள்ளுவனை காவல்துறை அடித்து வாகனத்தில் எப்படி ஏற்றலாம் என இப்போதே திருமுருகன்காந்தி, ஷா நவாஸ், அருள்மொழி, இன்னும் பலர் கதற ஆரம்பித்துள்ளனர்.

Loading...

இது பாசிசம் என்றும் ராமர் குறித்து விமர்சித்த காரணத்தால் திருவள்ளுவன் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இதற்காக அவரை விடுதலை செய்யக்கோரி மிக பெரிய போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாக திருமுருகன் காந்தி போன்றோர் முடிவு செய்துள்ளனர், நாகை திருவள்ளுவன் என்பது அவரது இயற் பெயர் கிடையாது என்றும் வேற்று மத பெயர் இருந்தால் போரட வாய்ப்பு இருக்காது என்பதால் அவரே திருவள்ளுவன் என மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது.

தற்போது இறந்தவர்கள் வீட்டில் துக்கத்துடன் இருக்க இதிலும் அரசியல் செய்யலாம் பிரிவினையை தூண்டலாம் என்று நினைத்த நபர்களை காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்தது வரவேற்க கூடிய செயல் என்று ஒரு தரப்பினரும், இது தவறான செயல் என மற்றொரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Trending