Connect with us

#24 Exclusive

திருமாவளவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட வேண்டியதற்கான காரணம் என்ன? திடுக்கிடும் தகவல் !

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளா கர்நாடக தமிழ்நாடு போன்ற பல்வேறு இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை படுகொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் அதி தீவிர பயங்கரவாதி அப்துல் நாசர் மதானி என்பவன். இவனை விடுதலை செய்யக்கோரி இன்று (10.12.19) சில அமைப்புகள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை செய்யகோரி.,

கேரளா எர்ணாகுளத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் எந்த மாநிலத்திலும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் இஸ்லாமியர்களோ அல்லது இஸ்லாமிய அமைப்பை சார்ந்தவர்களோ இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத பொழுது தமிழகத்தை சேர்ந்த சிதம்பரம் ஆதி திராவிடர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமாவளவன் அவர்கள் மட்டும் சிறப்பு அழைப்பாளராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Loading...

தீவிரவாத சட்ட திருத்த மசோதாவின் படி கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை மேலும் வலுவாக மாற்றி அமைத்தது அதன்படி தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய தனி நபர்களையும் தீவிரவாதியாக அறிவிக்கலாம் அந்த வகையில் இந்தியாவில் பல சதித்திட்டங்களை தீட்டி பல உயிர்களை பழிவாங்கிய மதானியை தடை செய்துள்ளது.

Loading...

இந்நிலையில் மக்களால் தேர்வாகி நாடாளுமன்ற உறுப்பினராக சென்றுள்ள ஒருவர் தீவிரவாதி ஒருவனை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அதிலும் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான அப்பாவி மக்களின் குடும்பத்தினர் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த சூழலில் திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னர் இந்து கோவில்கள் குறித்து திருமாவளவன் சர்ச்சையில் சிக்கிய நிலையில் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க படுமா?

கோவை குண்டு வெடிப்பில் மதானியால் இறந்த தலித்துகள் குடும்பத்திற்கு என்ன சொல்ல போகிறார் திருமாவளவன் !!

Loading...

Trending