Connect with us

#24 Exclusive

திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் வெற்றிதான் செல்லும் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் வெற்றிதான் செல்லும் நீதிமன்றம் தீர்ப்பு !

கடந்த சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறனின் தேர்தல் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தான் வெற்றி பெறவிருந்த சூழலில் , தபால் வாக்குகளை திட்டமிட்டு தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தால் 87 வாக்குகள் வித்தியாசத்தில் முருகுமாறன் பெற்ற வெற்றி.செல்லாது என அறிவிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

Loading...

கடந்த விசாரணையின் போது வாக்கு எண்ணிக்கையில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் ஆஜரான தொகுதி தேர்தல் அதிகாரி, சிலவற்றில் ஓட்டுச் சீட்டும், பெரும்பாலானவற்றில் சான்றொப்பமும் இல்லை என விளக்கம் அளித்தார் எனவேதான் இந்த தபால் வாக்குகளை செல்லாது என அறிவித்ததாகவும், இதில் எந்த தலையீடும் இல்லை என விளக்கம் அளித்தார்.

Loading...

இதனையடுத்து ஆதாரங்களின் அடிப்படையில் , அதிமுக எம் எல் ஏ முருகுமாரனின் வெற்றியே செல்லும் என்றும், திருமாவளவன் தோல்வி அடைந்தது உறுதி எனவும் திருமாவளவனுக்கு சாதகமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். இந்த முடிவினை எதிர்த்து திருமாவளவன் மேல் முறையீடு செய்யமாட்டார் எனவும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

©TNNEWS24

Loading...

Trending