Connect with us

#24 Exclusive

BREAKING திருமாவளவனின் எம் பி பதவி காலியாகிறது காயத்திரி ரகுராம் வைத்த ஆப்பு?

சென்னை :- விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இந்து மத கோவில்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியதை தொடர்ந்து அவர்மீது பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திருமாவளவன் தொடர்ந்து மத மோதலை உண்டு பண்ணும் நோக்கில் பேசிவருபதாகவும் அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை காயத்ரிரகுராம் திருமாவளவன் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக பேசி வருவதாகவும் , அவருக்கு இந்துக்கள் பாடம் கற்பிக்கவேண்டும் என்றும் அவரை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார், இந்நிலையில் இன்று மதியம் காயத்ரி ரகுராம் வீட்டினை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் நேற்று அவசரமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்யக்கூடாது என்றும் என்னை கைது செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தற்போதுவரை தமிழக காவல்துறை இதுவரை திருமாவளவனை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது இந்து மத பற்றாளர்கள் மற்றவர்களை அதிருப்தி அடைய செய்தது.

Loading...

இந்நிலையில் இன்று காயத்ரி ரகுராம் வீட்டினை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் பெண் அமைப்பினர் கொடுத்த அளப்பறையினால் இந்த விவகாரம் நாடாளுமன்ற விவகாரம் குழு தலைவர் வரை எதிரொலித்துள்ளது, இதுகுறித்து தமிழக தலைமை செயலாளருக்கு நாடாளுமன்ற விவகாரம் குழு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாகவும், மேலும் திருமாவளவன் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் விடியோவாக வெளியாகியுள்ளதும்..,

Loading...

மேலும் வருத்தம் தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூட அவர் பேசியதை நியாயம் உண்மை என்றே வலியுறுத்தியுள்ளதால் நிச்சயம் திருமாவளவனின் எம் பி பதவி பறிக்கப்படும் என்று உறுதியாகியுள்ளது. மேலும் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி எந்த மதத்தினையும் இழிவு செய்து பேசக்கூடாது என்று விதியிருக்கிறது.

எனவே விரைவில் திருமாவளவனின் சிதம்பரம் பானை உடைந்து இடைத்தேர்தல் உறுதியாகியுள்ளது, காயத்ரி ரகுராம் வீட்டில் அளப்பறையை செய்து இந்திய அளவில் பிரச்னையை எடுத்து சென்று தற்போது திருமாவளவனின் எம் பி பதவிக்கும் உலைவைத்துள்ளனர் வி சி க மகளிர் அணியினர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending