30 + 30 கோடி அதன் பிறகு இந்துக்கள்தான் சிறுபான்மையினர் திருமாவளவன் மதவெறி பேச்சு நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் மத மோதல்களை உண்டாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது தமிழர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய திருமாவளவன் இந்துக்களை சிறுபான்மை சமுதாயமாக மாற்றிவிடலாம் என்பது குறித்த கணக்கை மேடையில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார், CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தில் ஏன் கிறிஸ்துவர்களை சேர்க்க வில்லை என்று உங்களுக்கு தெரியுமா? அவ்வாறு சேர்க்காமல் இருப்பதன் மூலம் கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் சேருவதை சதித்திட்டம் மூலம் தடுத்து விட்டார்கள் என்று திருமாவளவன் பேசுகிறார்.

அத்துடன் உள்துறை அமைச்சர் அமிட்ஷா குறிப்பிடுகிறார் இந்தியாவில் சுதந்திரம் அடைந்த போது இஸ்லாமியர்கள் மக்கள் தொகை 9% இருந்தது தற்போது 14.5% அதிகரித்து விட்டது என்று தெரிவித்துள்ளார், இதன் மூலம் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இந்துத்துவ வாதிகளுக்கு அவர் மெசேஜ் கொடுக்கிறார்.

Loading...

உங்களுக்கு தெரியுமா இந்த நாட்டில் யார் பெரும்பான்மை கிறிஸ்துவர்கள் இஸ்லாமியர்கள் சேர்ந்தால் 25% வந்துவிடுவார்கள் அவர்களுடன் தலித் பழங்குடியினர், சீக்கியர்கள் பவுத்தர்கள் என பிரித்து கணக்கு போட்டால் 60 கோடிக்கு மேல் வந்து நிற்கும் இப்போது கணக்கு போட்டு பாருங்கள் யார் பெரும்பான்மை என்று உங்களுக்கு தெரியும் என மிகவும் வன்மத்துடன் பேசியுள்ளார்.

சிறிது நாட்களுக்கு முன்னர் நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை என்று பேசிய திருமாவளவன் இப்போது இந்துக்களை சிறுபான்மையினராக மாற்ற கணக்கு போட்டு பார்ப்பது அவரின் உள்மனதில் இந்துக்களுக்கு எதிரான வன்மத்தை வெளிப்படுத்துவதாக இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரம் தலித்துகள் குறித்து பேச திருமாவளவனுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் தனது சாதி சான்றிதழில் இந்து என்ற சொல்லை நீக்கினால் திருமாவளவன் தனி தொகுதியில் போட்டியிட முடியாது எனவும் கண்டித்துள்ளனர், தொடர்ந்து கோவில்கள் குறித்து ஆபாச கருத்தை பேசிய திருமாவளவன் தற்போது இந்துக்களை சிறுபான்மையினராக மாற்ற கணக்கு போட்டு பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மதம் மோதலை தூண்டும் விதமாகவும் இந்து கடவுள்களை விமர்சனம் செய்துவரும் திருமாவளவனை கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஏன் எனவும் உடனடியாக மதம் மோதல்களை தூண்டும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டுள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*