கூலிக்கு மாரடிக்கிற கும்பலாக சிறுத்தைகள் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் திருமாவளவன் கடும் பாய்ச்சல் திமுக அதிர்ச்சி !!

கூலிக்கு மாரடிக்கிற கும்பலாக சிறுத்தைகள் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் திருமாவளவன் கடும் பாய்ச்சல் திமுக அதிர்ச்சி !!

திருச்சி :- விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருச்சி பழைய மதுரை ரோட்டில் தேசம் காப்போம் மாநாடு நேற்று நடைபெற்றது, அதில் திருமாவளவன் பேசிய பேச்சுக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார் அப்போது பேசியவர், மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை பழங்குடியினர், தலித்துகளும் பாதிக்கப்பட போவதாக தெரிவித்தார்.

அதன் பிறகு திருமாவளவன் பேசிய பேச்சு அதிர்வலைகளையும், விவாதங்களையும் எழுப்பியுள்ளன, திடீர் என ஆவேசமடைந்தவர் 70 வயதான உங்களுக்கு ஆளும் ஆசை வரும்போது, 30 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் ஆள நினைக்க மாட்டடோமா,? ஆனால் தற்போதுவரை நாங்கள் நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.

Loading...

அதனுடன் சிறுத்தைகள் கூலிக்கு மாரடிக்குற கும்பலாகவோ, அல்லது கூலிக்கு கோஷம் போடுகிற கும்பலாகவோ இருப்பார்கள் என எண்ணிவிடாதீர்கள் சிறுத்தைகள்தான் அரசியல் தலையெழுத்தை மாற்ற கூடிய அதிகாரம் படைத்தவர்கள் என பேசியிருந்தார்.

Loading...

மேலும் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார் இந்நிலையில் திருமாவளவன் யாரை குறிப்பிட்டு அவ்வாறு பேசினார் என்பது விவாதத்தை எழுப்பியுள்ளது, 70 வயதான உங்களுக்கே என ரஜினியை சொன்னாரா அல்லது ஸ்டாலினை சொன்னாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அத்துடன் வெறும் கூலிக்கு மாரடிக்குற கூட்டமாக சிறுத்தைகள் இருக்கமாட்டர்கள் என கூறியது, திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி திமிர் பேச்சிற்கு பதிலடி கொடுத்தார் என கூறப்படுகிறது, அதே நேரத்தில் தலித்துகள் நீதிபதியானது யார் போட்ட பிச்சையும் அல்ல, அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்த உரிமை என பேசினார் அப்போது சிறுத்தைகள் ஆக்ரோஷமாக RS பாரதி என கத்தினர்.

கூலிக்கு மாரடிக்குற கூட்டம் இல்லை என்று ஸ்டாலினை நோக்கி திருமாவளவன் கேள்வி எழுப்பினரா? அரசியல் அதிகாரத்திற்கு வருவோம் என பேசியிருப்பது ஸ்டாலினுக்கு வைத்த செக்கா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *