இந்த 50 பேர்தான் ராமதாஸின் குடும்பமாம் பேரக்குழந்தைகள் முதல் மகள்கள் வரை அனைவரது புகைப்படமும் உள்ளே !

இந்த 50 பேர்தான் ராமதாஸின் குடும்பமாம் பேரக்குழந்தைகள் முதல் மகள்கள் வரை அனைவரது புகைப்படமும் உள்ளே !

இந்த 50 பேர்தான் ராமதாஸின் குடும்பமாம் பேரக்குழந்தைகள் முதல் மகள்கள் வரை அனைவரது புகைப்படமும் உள்ளே !

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது குடும்பத்தில் எவ்வாறு தீபாவளி திருநாளை கொண்டாடினார் என்று தனது ஒட்டுமொத்த குடும்பத்தினரின் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது :-

தீபஒளித் திருநாளைக் கொண்டாடும் வழக்கம் எனக்கு இல்லை. அதேநேரத்தில் எனது இல்லத்தில் உள்ள மற்ற அனைவரும் தீபஒளித் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அதற்கு நான் எந்த வகையிலும் தடை போட மாட்டேன். ஆனால், பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசுகள், அதனால் மனித குலத்திற்கு ஏற்படும் தீங்குகள் குறித்த சிந்தனை என் மனதை அரித்துக் கொண்டே இருக்கும். எனினும், குழந்தைகள் நிறைந்த இல்லம் என்பதால் அவர்களின் தீபஒளிக் கொண்டாட்டங்களுக்கு தடை போடவும் மனமில்லை. அதேநேரத்தில் பட்டாசு வெடிக்கும் வழக்கத்தை ஒழித்து பசுமைத் தீபஒளியை வழக்கமாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருந்தது.

Loading...

இந்த ஆண்டு தீபஒளித் திருநாளுக்கு எனது மகன், மருமகள், மகள்கள், மருமகன்கள், பெயரன்கள், பெயர்த்திகள், கொள்ளுப்பெயரன்கள், கொள்ளுப்பெயர்த்திகள் உள்ளிட்ட அனைவரும் தைலாபுரம் தோட்டத்திற்கு தீபஒளி கொண்டாட வந்திருந்தனர். அவர்களில் எனது 8 வயது கொள்ளுப்பெயர்த்தி, 4 வயது கொள்ளுப் பெயரன் உள்ளிட்ட குழந்தைகளை அழைத்து பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்களுக்கு விளக்கினேன்.

Loading...

‘‘ நமது தோட்டத்திற்கு உள்ளே நல்ல காற்று உள்ளது. இவ்வளவு நல்லக் காற்றை நமக்கு கொடுப்பவை தோட்டத்தில் உள்ள மரம். செடி, கொடிகள் தான். வெளியில் பல்வேறு காரணங்களால் மாசு நிறைந்த காற்று உள்ளது. நாம் பட்டாசு வெடிக்கும் போது நமது தோட்டத்திலும், அதை சுற்றிலும் உள்ள காற்று கெட்ட காற்றாக மாறி விடும். அந்த கெட்ட காற்றைத் தான் நீங்கள் சுவாசிப்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல…. ஒரு வயதுள்ள உங்கள் தம்பி, தங்கைகளும் அந்த கெட்ட காற்றைத் தான் சுவாசிப்பார்கள். அது நமது உடல் நலனை பாதிக்காதா?’’ என்று பேரக்குழந்தைகளிடமும், கொள்ளுப்பேரக் குழந்தைகளிடமும் கேட்டேன். அவர்களுக்கு இது கொஞ்சம் புரியத் தொடங்கியது.

தொடர்ந்து அவர்களின் மொழியில், அவர்களுக்கு தெரிந்த விஷயங்களைக் கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். ‘‘ பிள்ளைங்களா இந்த மரம், செடி, கொடிகள் எல்லாம் நம்மைப் பற்றி என்ன பேசிக் கொள்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?’’ என்று கேட்டு அவர்களின் கவனத்தை குவித்தேன்.

‘‘ இந்த மனிதர்கள் எல்லாம் ஏன் இப்படி மோசமாக நடந்து கொள்கிறார்கள்? நாம் அவர்களுக்கு நல்ல காற்றைக் கொடுக்கிறோம். ஆனால், அவர்கள் பட்டாசை வெடித்து நல்ல காற்றை கெடுத்துக் கொள்கிறார்களே. பட்டாசு வெடிக்காவிட்டால் நல்ல காற்றை சுவாசிக்கலாமே?. ஏன் இந்த மனிதர்களுக்கு இந்த உண்மை புரிய மாட்டேன்கிறது’’ என்று நம்மைப் பற்றி மரங்களும், செடி கொடிகளும் பேசிக்கொள்கின்றனவாம் என்று அவர்களிடம் கூறினேன்.

அந்த பிஞ்சுகளின் மனதில் இந்த விஷயம் மிகவும் நன்றாக பதிந்து விட்டது. பட்டாசு வெடிப்பது மிகவும் தீமையானது என்ற உண்மை அவர்களுக்கு புரிந்து விட்டது. அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. அவர்களை விட மூத்தவர்களான எனது பேரக் குழந்தைகளிடமும் பட்டாசு வெடிப்பதன் தீமைகள் குறித்து விளக்கினார்கள். நான் பல ஆண்டுகளாக கனவு கண்டு கொண்டிருந்த ஒரு விஷயம் சில நிமிடங்களில் நனவாகி விட்டது.

பட்டாசு வெடிப்பது சுற்றுச்சூழலை கெடுக்கும் என்பதை உணர்ந்து கொண்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசைத் தொடக்கூட இல்லை. தீபஒளிக்காக வாங்கப்பட்ட பட்டாசுகள் அனைத்தும் வெடிக்கப்படாமல் அப்படியே தான் கிடக்கின்றன. இந்த ஆண்டு தீபஒளி எங்கள் வீட்டில் பட்டாசுகள் வெடிக்கப்படாத பசுமைத் தீபஒளியாக மாறியது. நானும் ஒரு குழந்தையாக மாறி மகிழ்ந்தேன்.

தீபஒளித் திருநாள் முடிவடைந்து நேற்று முன்நாள் தைலாபுரம் தோட்டத்திலிருந்து புறப்பட்ட எனது பெயர்த்திகள், ‘‘ தாத்தா…. இந்த ஆண்டு தீபஒளி நமக்கு மிகவும் நல்ல தீபஒளி தாத்தா’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள். தொடர்ந்து,‘‘ இந்த மாதிரி நல்ல விஷயங்களையெல்லாம் வேறு எந்த தலைவர்கள் கூறுகிறார்கள்? நீங்கள் தான் கூறுகிறீர்கள்? இனியும் வேறு யார் கூறுவார்கள்…. நீங்கள் தான் கூற வேண்டும்’’ என்று கூறிவிட்டுச் சென்றார்கள். அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு திரும்பும்போது, என்னைச் சுற்றி இருந்த மரம், செடி, கொடிகள் எல்லாம் என்னைப் பார்த்து சிரித்தன. அந்த சிரிப்பின் மூலம், எனது வளர்ப்புகளான, அவை எனக்கு நன்றி கூறியிருக்கலாம்.

பட்டாசு வெடிப்பது குறித்து நான் கூறிய அறிவுரைகள் அனைத்தும் எனது பேரக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல… பாட்டாளி சொந்தங்களுக்கும் தான். அடுத்த ஆண்டு தீபஒளி திருநாள் உங்கள் வீடுகளிலும் பசுமைத் தீபஒளியாக அமைய வேண்டும். வாழ்த்துகள்!

(படம்: கோப்புப் படம்)

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *