கவுன்சிலர் கூட இல்லை அதற்குள் மணல் கொள்ளை சீமானுக்கு செக் வைத்த விவசாயி !

கவுன்சிலர் கூட இல்லை அதற்குள் மணல் கொள்ளை சீமானுக்கு செக் வைத்த விவசாயி !

Loading...

அனுப்புனர், பெறுநர் முகவரியுடன் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர் கிருஸ்டடைன் ராஜசேகர் என்பவர் மீது குற்றம் சுமத்தி விவசாயி சீமானுக்கு எழுதிய கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனுப்புனர்:
C.சுந்தரபாண்டியன்
விவசாய சங்க தலைவர்
கோரம்பள்ளம்/தாமிரபரணி
நீர் பாசன சங்க கமிட்டி.
தூத்துக்குடி மாவட்டம்.

Loading...

பெறுநர்:
திரு.சீமான்
தலைமை ஒருங்கினைப்பாளர்,
நாம் தமிழர்கட்சி,
தமிழ்நாடு,

பொருள் : தங்களுடைய முன்னாள் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் திரு.கிருஸ்டடைன் ராஜசேகர் என்பவரால் தூத்துக்குடியில் நடைபெறும் மாபெறும் மணல் கொள்ளை மற்றும் விவசாய அழிப்பை தடுத்திட வேண்டி மனு .

வணக்கம்,

       நான் கோரம்பள்ளம் விவசாய சங்க தலைவராக இருந்து விவசாய மேம்பாட்டிற்காக சில நல்ல காரியங்களை செய்து வருகிறேன், அன்பு சகோதரர் சீமான் அவர்களே, நீங்கள் மேடைக்கு மேடை விவசாயத்தை பற்றியும், மக்களின் வாழ்வாதாரத்தை பற்றியும் அருமையாக பேசிவருகின்றிர்கள் சந்தோசம், ஆனால் நீங்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி வேட்பாளராக நிறுத்திய திரு. கிருஸ்டடைன் ராஜசேகர் என்பவர் தூத்துக்குடியில் மாபெரும் மணல் கொள்ளை கும்பல்களின் தலைவனாக இருந்து செயல்பட்டு வருகிறார், அவர் தூத்துக்குடி திருசெந்தூர் ஸ்ரீவைகுண்டம் ஒட்டபிடாரம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள், கன்மாய்கள், ஓடைகள் ஆகியவற்றில் இருந்து விவசாயிகளுக்கு கரம்பை மண் அள்ளுவதற்கு அரசாங்கத்தால் அரசு ஆணை G.O- 50-ன் படி இலவசபாஸ் (அனுமதி சீட்டு) வழங்கபட்டு வருகிறது - ஆனால் அதை முறைகேடாக தூத்துக்குயில் நடைபெறும் இரயில்வே வேலைக்கும், கனநீர் ஆலை விரிவாக்க பணிகளுக்கும் சரள்மண் எடுத்து செல்லபடுகிறது - இதன் மூலம் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றார்

உங்கள் பொருப்பாளர் –

இவர் சுமார் 40க்கும் மேற்பட்ட அதிக பாரம் ஏற்றும் SKDR என்ற பெயரில் ஒடும் லாரிகள் மற்றும் இரவில் மணல் திருடுவதற்கு ஐந்து பொக்லைன் இயந்திரம் வைத்து கொண்டு மணல்கொள்ளை கும்பல் தலைவனாக வலம் வருகிறார் .

இவரால் இங்கு சுமார் 25 க்கும் மேற்பட்ட குளங்கள் சூரையாடபட்டு நாசமாக்கபட்டுள்ளது – இதனால் நிலத்தடி நீர் மட்டமானது 150- அடிக்கும் கீழ் சென்று விட்டது – தாமிரபரணி வடிகால் பகுதி விவசாயிகளான நாங்கள் வருடத்திற்கு இரண்டு முறை விசாயம் பார்ப்போம் ஆனால் இப்போது ஒரு முறை பார்பதே சிரமாக உள்ளது, எனவே நீங்கள் விவசாயத்தை காப்பாற்றுவேன் என்று கூறுவது உன்மையானால் உடனடியாக அவரின் மேல் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த சமூக விரோதியை சட்ட ரீதியாக காவல் துறையிடம் பிடித்து கொடுத்து உங்களின் உண்மை தன்மையை நிலை நிருத்தி கொள்ள வேண்டுகிறேன் – நான் உங்களுக்கு ஒரு சவாலாகவே தெரிவித்து கொள்கிறேன் – உங்களால் முடியாது என்று ஏன் என்றால் நீங்களும் ஒரு அரசியல்வாதி தானே
– நன்றி –

                     இப்படிக்கு.       

                 C.சுந்தரபாண்டியன்   விவசாய சங்கதலைவர் கோரம்பள்ளம் / தாமிரபரணி நீர் பாசன சங்ககமிட்டி தூத்துக்குடி மாவட்டம்

தமிழ்நாடு.

தமிழகத்தில் வார்டு கவுன்சிலர் கூட நாம் தமிழர் கட்சி சார்பில் இல்லை.., ஆனால் அதற்குள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதா என்று பலரும் ஆச்சர்யத்துடன் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பேசிவருகின்றனர்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2667 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*