தங்க சுரங்கம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புவியியல் மையம் !

தங்க சுரங்கம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புவியியல் மையம் !

Loading...

உத்தர பிரதேசத்தில் இரு தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் மொத்தமாக 3300 டன்னுக்கு மேலாக தங்கம் இருப்பதாகவும் எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரோ மாவட்டத்தில் உள்ள மலைகளில் கணிமங்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் இங்கு 3350 டன் எடை அளவு தங்கம் இருக்கும் இரு தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதை இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

Loading...

நேற்று முழுவதும் இந்த செய்தி சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது. மேலும் இந்த சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் தங்கத்தின் அளவானது தற்போதைய இந்தியாவின் தங்க இருப்பை விட அதிகம் என சொல்லப்பட்டது. இதன் மதிப்பு 12 லட்சம் கோடி எனவும் இந்த சுரங்கங்களை தோண்ட மாநில அரசு டெண்டர் விடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என்று இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் மறுத்துள்ளது. ஆனால் மற்றொரு தரப்போ தங்க சுரங்கத்தில் 160 டன் அளவுக்கு தங்கம் கிடைக்கலாம் எனவும் 3350 டன் என்பது மிகைப்படுத்தப்பட்டது எனவும் கூறியுள்ளனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*